twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய்பீம் திருட்டு கதை.. சொன்னபடி நடக்கவில்லை..படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

    |

    சென்னை : ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்று குளஞ்சியப்பன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

    இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

    ஜெய்பீம் திரைப்படம் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது.

    ஒரே அலைவரிசையில் அமுதாவும் அன்னலட்சுமியும்.. ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்! ஒரே அலைவரிசையில் அமுதாவும் அன்னலட்சுமியும்.. ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    ஜெய்பீம் திரைப்படம் 90 களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் துயரை விவரிக்கிறது. ராஜகண்ணு உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.

    சூர்யாவின் நடிப்பில்

    சூர்யாவின் நடிப்பில்

    இயக்குநர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். சூர்யா சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் லிஜோமோல் ஜோஸ் செங்கேனி கதாபாத்திரத்திலும், மணிகண்டன் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ஜெய்பீம் எங்கள் கதை

    ஜெய்பீம் எங்கள் கதை

    இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமான எடுக்க நினைத்து இருந்தேன். ஆனால், என் கதையை திருடிவிட்டதாகவும். இதுதொடர்பாக, சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, கார்த்தி, இயக்குநர் ஞானவேல், திரைப்படத்தினை ஓடிடியில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்தினர் மீது முதலில் புகார் கொடுத்தோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தோம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    15ந் தேதி விசாரணை

    15ந் தேதி விசாரணை

    இதனால் தற்போது சென்னை சைதாபேட்டையில் உள்ள மாநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதுதொடர்பாக காவல்துறை முழுமையாக விசாரணை நடத்தி காப்புரிமை மற்றும் அறிவு சொத்துரிமை பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குளஞ்சியப்பன் என்பவர் சென்னை மாநகர நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதி நடக்கவுள்ளது.

    English summary
    Case against actor Surya Jai Bhim film crew
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X