»   »  படுக்கைக்கு அழைத்த இயக்குனர்: நேராக காவல் நிலையம் சென்ற இளம்பெண்

படுக்கைக்கு அழைத்த இயக்குனர்: நேராக காவல் நிலையம் சென்ற இளம்பெண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: படுக்கைக்கு வந்தால் இரண்டு படங்களில் ஹீரோயினாக்குவதாக தெரிவித்த இயக்குனர் மீது இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. அண்மை காலமாக அது குறித்து நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மராத்தி படம்

மராத்தி படம்

மராத்தி படத்திற்கு புதுமுகங்கள் தேடப்படுவது குறித்து அறிந்த 19 வயது பெண் கடந்த 4ம் தேதி புனேவில் நடந்த ஆடிஷனில் கலந்து கொண்டார். அப்பொழுது ஸ்டுடியோவில் இயக்குனர் அப்பா பவார் மற்றும் இரண்டு தயாரிப்பாளர்கள் இருந்துள்ளனர்.

தேர்வு

தேர்வு

ஆகஸ்ட் 6ம் தேதி அந்த பெண்ணை இயக்குனரின் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றவரிடம் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக அவரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படுக்கை

படுக்கை

அப்பா பவார் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த இரண்டு படங்களில் உன்னை ஹீரோயினாக்குகிறேன். ஆனால் அதற்கு நீ என்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று கூற அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

போலீஸ்

போலீஸ்

அப்பா பவார் கூறியதை கேட்டு அதிர்ந்த அந்த பெண் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். அந்த பெண் இசை வீடியோக்கள், நிகழ்ச்சிகளுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 19-year-old woman has given complaint against a director for asking sexual favours from her in return for movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil