»   »  காதல் முறிந்தாலும் படத்திற்காக ஒன்று சேர்ந்த சிம்பு-நயன், சித்து-சமந்தா

காதல் முறிந்தாலும் படத்திற்காக ஒன்று சேர்ந்த சிம்பு-நயன், சித்து-சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் முறிந்த பிறகும் சிம்பு, ஹன்சிகா, நயன்தாரா, சித்தார்த், சமந்தா ஆகியோர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

படங்களில் நடிக்கையில் நடிகர், நடிகை இடையே காதல் ஏற்படுவது புதிது அன்று. அவ்வாறு ஒன்றாக சேர்ந்து நடிக்கையில் காதலில் விழுந்தவர்கள் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததும் உண்டு.

அவ்வாறு காதல் முறிந்த பிறகும் முன்னாள் காதலர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கும் வழக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

சிம்பு, ஹன்சிகா

சிம்பு, ஹன்சிகா

சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் ஒன்று சேர்ந்து நடித்த போது காதலிக்கத் துவங்கினர். வாலு படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இருப்பினும் காதல் முறிவை பெரிதுபடுத்தாமல் மீதமுள்ள காட்சிகளில் ஒன்று சேர்ந்து நடித்தனர்.

சிம்பு, நயன்

சிம்பு, நயன்

ஹன்சிகாவுக்கு முன்பு சிம்பு நயன்தாராவை தான் காதலித்தார். அவர்களின் காதல் முறிந்த பிறகு இருவரும் ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து சிம்புவும், நயனும் இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சித்து, சமந்தா

சித்து, சமந்தா

சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த சித்தார்த்தும், சமந்தாவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் அதை எல்லாம் மறந்துவிட்டு பெங்களூர் டேஸ் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

காதல் முறிந்து மனதில் வேதனையும், கோபமும் இருந்தாலும் அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பணிக்காக ஒன்று சேர்ந்து நடிக்கும் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது.

English summary
Inspite of break-up Simbu-Nayanthara, Sidharth-Samantha have come forward to work together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil