»   »  நடிகையை அசிங்கப்படுத்தி வீடியோ எடுத்த செல்போன் வக்கீலிடம் உள்ளதா?

நடிகையை அசிங்கப்படுத்தி வீடியோ எடுத்த செல்போன் வக்கீலிடம் உள்ளதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கேரள போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே பல்சர் சுனி பயன்படுத்திய செல்போன் இன்னும் கிடைக்கவில்லை.

பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்பத்திரிக்கை

குற்றப்பத்திரிக்கை

நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை அங்கமலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பல்சர் சுனி

பல்சர் சுனி

குற்றப்பத்திரிகையில் 7 பேர் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பல்சர் சுனி தான் முக்கிய குற்றவாளி என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன்

செல்போன்

நடிகையை மானபங்கப்படுத்தியபோது அதை வீடியோ எடுத்த செல்போன் இன்னும் கிடைக்கவில்லை. அந்த செல்போன் தனது வழக்கறிஞரிடம் உள்ளதாக பல்சர் சுனி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

சுனி கூறியதை அடுத்து போலீசார் அவரின் வழக்கறிஞர் பிரதீஷ் சாக்கோவிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியும், அவர் வீட்டில் சோதனை செய்தும் செல்போன் கிடைக்கவில்லை. அந்த செல்போன் சாக்கோவிடம் இருந்து கிடைத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
The Kerala police on tuesday indicted seven persons for allegedly abducting and molesting a popular Malayalam actress two months ago.The police made the indictment in its charge sheet filed in a magisterial court in the abduction-cum-molestation case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil