Don't Miss!
- News
ஏப்.14 முதல் அண்ணாமலைக்கு எதிராக சென்னை-கன்னியாகுமரி சக்தி யாத்திரை: காயத்ரி ரகுராம் பரபர ட்வீட்!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
வடிவேலு தாயார் காலமானார்.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. வடிவேலுவின் அம்மா மறைவை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வைகைப்புயல் வடிவேலு என அடைமொழியுடன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் வடிவேலு சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.
அவர் மீது போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஹீரோவாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.
சிறந்த
துணை
நடிகர்
விருதை
வென்ற
மாஸ்டர்
மகேந்திரன்!!

வடிவேலு தாயார் காலமானார்
நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கிற பாப்பா வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. மதுரை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. நடிகர் வடிவேலுவின் தாயார் காலமான தகவல் அறிந்த நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் இரங்கல்
நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத் தாயார் திருமதி சரோஜினி என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்த மிகவும் வருத்த முற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். வைகைப்புயல் திரு வடிவேலு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்
#Vadivelu என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கி நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் வடிவேலு அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை பதிவிட்டு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பலரையும் சிரிக்க வைத்து வந்த வடிவேலு அம்மாவின் மறைவால் அழுது கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லையே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பல படங்கள் கைவசம்
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த பிரச்சனை காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் சிரமப்பட்ட நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் வடிவேலு சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.