twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த சொகுசு கார் வழக்கு...விஜய்க்கு அபராதம்...நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

    |

    சென்னை : நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்திய அளவில் டாப் நடிகராக மாறி உள்ள விஜய் அடுத்தடுத்து சொகுசு கார் வழக்குகளில் சிக்கி வருவது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது அடுத்த படங்கள் பற்றிய தகவல் ஒரு பக்கம் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், மற்றொரு புறம் சொகுசு கார் வழக்குகளும் விஜய்யை விடாமல் தொடர்ந்து வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    கேக் வெட்டி கொண்டாட்டம்... அருண் விஜய் பேமிலி கொண்டாடிய நாய் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்... அருண் விஜய் பேமிலி கொண்டாடிய நாய் பிறந்தநாள்

     விமர்சனங்களை நீக்க லட்சங்கள்

    விமர்சனங்களை நீக்க லட்சங்கள்

    இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விஜய்யின் கோரிக்கையை ஏற்க மறுத்த தனி நீதிபதி சுப்ரமணியம், ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன் கடும் விமர்சனங்களையும் முன் வைத்தார். தனி நீதிபதியின் கருத்தை நீக்குவதற்காக விஜய் பல லட்சம் செலவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    அடுத்த சொகுசு கார் வழக்கு

    அடுத்த சொகுசு கார் வழக்கு

    இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.7.98 கோடி மதிப்பிலான காருக்கு ரூ.63 லட்சம் வரை வரி விதிக்கப்பட்டது. முதலில் இதனை கட்ட மறுத்த விஜய், பிறகு வரியை செலுத்தி உள்ளார். ஆனால் வரி கட்ட தாமதமானதற்கு வணிக வரித்துறை கூடுதல் அபராதம் விதித்தது.

    வழக்கு தொடர்ந்த விஜய்

    வழக்கு தொடர்ந்த விஜய்

    தாமதித்த காலத்திற்கான அபராதமாக 400% விதித்து ரூ. 30,23,609 செலுத்த வேண்டுமென்ற வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து விஜய் சார்பில் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிம்டபிள்யூ எக்‌ஸ் 5 என்ற சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400 சதவீத அளவிற்கு வணிகவரித் துறை அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

    விஜய் தரப்பு விளக்கம்

    விஜய் தரப்பு விளக்கம்

    ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், எனவே அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பு நடைபெற்றது.

    அபராதம் வசூலிக்க தடை

    அபராதம் வசூலிக்க தடை

    வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும் இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் ஹோட்டல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கோடு இந்த வழக்கையும் சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அரசு தரப்பிற்கு உத்தரவு

    அரசு தரப்பிற்கு உத்தரவு

    எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 1 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுவரை அபராத தொகையை செலுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    English summary
    After Rolls Royce Ghost car case, now Vijay's BMW car case come to hiring. In this case Chennai high court issued interim stay order for collecting extra fine from Vijay. Next hiring will postponed to February 1st.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X