»   »  வெள்ளம்.. சத்தமில்லாமல் உதவி செய்யும் சுஹாசினி- மணிரத்னம் தம்பதி

வெள்ளம்.. சத்தமில்லாமல் உதவி செய்யும் சுஹாசினி- மணிரத்னம் தம்பதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை சுஹாசினி - மணிரத்னம் தம்பதியர் சத்தமின்றி செய்து வருகின்றனர்.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் மக்களின் நிலையைக் கண்டு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நட்சத்திரத் தம்பதியரான சுஹாசினி - மணிரத்னம் இருவரும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்களது மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் மூலமாக வழங்கி வருகின்றனர்.

மக்களுக்குத் தேவையான பிஸ்கட்டுகள், மருந்துகள், டெட்டால், குழந்தை உணவு மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.

இதில் மருந்துப் பொருட்கள்,டெட்டால், குழந்தை உணவு மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை இயக்குநர் மணிரத்னம் நேரடியாக சென்று கடையில் வாங்கியதாகவும், அவர் இது போன்று செல்வதை தான் இப்போதுதான் முதல்முறையாக பார்ப்பதாகவும் சுஹாசினி தெரிவித்து இருக்கிறார்.

English summary
Actress Suhasini Maniratnam Wrote on Twitter "The master buying milk powder medicines baby food dettol from a pharmacy for flood victims..I've never seen this".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil