twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவமாய் தவமிருந்து படத்தை இதற்காக தான் எடுத்தேன்.. மேடையில் பேசிய சேரன்!

    |

    சென்னை: இயக்குனர் சேரன் பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து நல்ல படைப்புகளை இன்று வரை கொடுத்து வருகிறார்

    குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த இயக்குனராக உள்ள சேரன் இப்பொழுது நடிகராகவும் படங்களில் நடித்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்

    இந்த நிலையில் தவமாய் தவமிருந்து படத்தை எதற்காக எடுத்தேன் என்ற காரணத்தை மேடையில் சேரன் பகிர்ந்துள்ளார்

    மனதை உலுக்கியது

    மனதை உலுக்கியது

    காதலை மிக வித்தியாசமான கோணத்தில் காட்டிய திரைப்படம் பாரதிகண்ணம்மா. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கியது என்று சொல்லலாம். சேரன் இயக்கத்தில் வெளியான முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

    சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

    சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

    இந்த நிலையில் ஆட்டோகிராஃப் படத்திற்காக பல நடிகர்கள் நடிக்க இருந்து அனைத்தும் கைகூடாமல் போக இறுதியாக ஆட்டோகிராப் படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான சேரனுக்கு ரசிகர்கள் மேலும் பலமடங்கு ஆதரவை அளித்தனர். ஆட்டோகிராஃப் திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிப் படமாக உள்ளது.

    41 1q 171 தொடர்ந்து ஹீரோவாக நடித்தார்

    41 1q 171 தொடர்ந்து ஹீரோவாக நடித்தார்

    ஆட்டோகிராஃப் கொடுத்த வெற்றியை தொடர்ந்து சேரன் இயக்கும் அனைத்து படங்களிலும் அவரே ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தந்தைகளின் தியாகத்தை உணர்த்தும் வகையில் வெளியான திரைப்படம் தவமாய் தவமிருந்து. இதுவரை இயக்குனர்கள் சொல்ல மறந்த தந்தையின் தியாகத்தை கூறிய தவமாய் தவமிருந்து படம் பல விருதுகளை வென்றது. பார்க்கும் அனைவரின் மனதையும் உலுக்கும் இந்த படத்தில் சேரன் ஹீரோவாக நடித்து இருப்பார். அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும் மிகத் தத்ரூபமாக நடித்திருப்பார்கள்.

    தவமாய் தவமிருந்து எதற்காக எடுத்தேன்

    தவமாய் தவமிருந்து எதற்காக எடுத்தேன்

    இந்த நிலையில் சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசிய சேரன் தவமாய் தவமிருந்து படம் எதற்காக எடுத்தேன் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது அதுவரை வெளியான அனைத்து படங்களிலும் அம்மாக்களின் தியாகத்தை பற்றி மட்டுமே கூறிவந்தார்கள். அப்பாக்களை பற்றி பெரிதாக யாரும் சொல்லியதில்லை எனவே அப்பாவின் தியாகத்தையும் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதையை இயக்க நினைத்து உருவான கதைதான் தவமாய் தவமிருந்து. இந்த படம் இன்று வரை என்னுடைய மனதுக்கு நெருக்கமான படமாக உள்ளது என சேரன் தவமாய் தவமிருந்து படத்தை எதற்காக இயக்கினேன் என்ற காரணத்தை பகிர்ந்துள்ளார்.

    English summary
    Cheran Speech on Why he took Thavamai Thavamirundhu Movie ?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X