»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திரைப்பட இயக்குனர் சேரன் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு திரைப்படங்களை இயக்கியவர்சேரன். சரஸ்வதி பிலிம்ஸ் அதிபர் தேனப்பனிடம் ஒரு லட்ச ரூபாய் கடன்வாங்கியிருந்தார் சேரன்.

கடனை திருப்பித் தரும் விதமாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதிதேனப்பனுக்கு செக் ஒன்றை கொடுத்தார் சேரன். ஆனால் வங்கிக் கணக்கில் பணம்இல்லை எனக் கூறி செக் திரும்பி வந்துவிட்டது.

இதையடுத்து தேனப்பன் சென்னை 17-வது நீதிமன்றத்தில் சேரன் மீது செக் மோசடிவழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில் சேரன் ஆஜரானபோது சரஸ்வதி பிலிம்ஸ் அலுவலக ஊழியர்வெங்கடாசலம் எங்களுக்குள் இந்த பிரச்னை தொடர்பாக தீர்வு கண்டுவிட்டோம் எனகூறினார். இதனால் மாஜிஸ்டிரேட் ராமசாமி வழக்ககை தள்ளுபடி செய்து உத்தரவுபிறப்பித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil