»   »  புலி கிராபிக்ஸ்... திருப்தியடையாத சிம்புதேவன்.. மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்!

புலி கிராபிக்ஸ்... திருப்தியடையாத சிம்புதேவன்.. மீண்டும் முதலிலிருந்து ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் புலி படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், மீண்டும் முதலிலிருந்து அதைச் செய்யச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சிம்பு தேவன்.

புலி படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இணையத்தில் பலத்த வரவேற்பு மற்றும் அதற்கு இணையான கிண்டல் விமர்சனங்களை இந்த டீசர் சந்தித்து வருகிறது.


திரையுலக நட்சத்திரங்களான சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலரும் ‘புலி' டீசருக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.


Chimbu Devan decides to rework on Puli Graphics

ஆனாலும் இயக்குனர் சிம்புதேவனுக்கு இதுவரை இப்படத்திற்காக செய்யப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் திருப்திகரமாக இல்லையாம். ரசிகர்களை முழு உணர்வுடன் ரசிக்க வைக்கும்படி கிராபிக்ஸ் அமையவேண்டும் என்பதால், இந்த கிராபிக்ஸ் பணிகளை மறுபடியும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். இதனால், ‘புலி' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.


ஆனால் செப்டம்பருக்குள் அனைத்தையும் முடித்து திட்டமிட்டபடி விஜயதசமிக்கு இந்தப் படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளாராம்.

English summary
Director Chimbu Devan is unhappy with the outcome graphics work for Vijay's Puli and decided to rework the same.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil