For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உனக்கெல்லாம் மரியாதையே கிடையாது… மாமினு கிண்டலடித்த நெட்டிசன்ஸை வச்சி செய்த சின்மயி !

  |

  சென்னை : 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்று வசீகரிக்கும் காந்தக்குரலின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் சின்மயி. இவர் எத்தனை வேகமாக வளர்ந்தாரோ, அத்தனை வேகமாக சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் வளர்ந்தன.

  அம்மா சொன்ன அந்த வார்த்தை.. உருகி உருகி காதலித்தவரை பிக்பாஸ் நடிகை கழட்டிவிட்டதற்கு காரணம் அதானாம்! அம்மா சொன்ன அந்த வார்த்தை.. உருகி உருகி காதலித்தவரை பிக்பாஸ் நடிகை கழட்டிவிட்டதற்கு காரணம் அதானாம்!

  சின்மயி தன்னை மாமி என்று மீம்ஸ் போட்டு நக்கலடித்த நெட்டிசன்ஸை வெளுத்து வாங்கி உள்ளார்.

  இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் அனைவராலும் பகிரப்பட்டு பரப்பாகி வருகிறது.

  மீ டூ விவகாரம்

  மீ டூ விவகாரம்

  ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம் பாலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, கோலிவுட் வரை புயலைக் கிளப்பியது. ட்விட்டரில் ட்ரெண்டான METOO ஹேஷ்டேக் மூலம் ஏராளமான நடிகைகள் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியுலகிற்கு எடுத்துரைத்தனர். அப்படி தமிழ் திரையுலகில் வெடித்த மிகப்பெரிய சம்பவம் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து விவகாரம்.

  வைரமுத்து மீது குற்றச்சாட்டு

  வைரமுத்து மீது குற்றச்சாட்டு

  சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது வைரமுத்து தனக்காக தனி அறையில் காத்திருந்ததாக கூறி புயலைக் கிளப்பினர் சின்மயி. சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை என டுவிட்டரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, தொடர்ந்து வைரமுத்து குறித்து சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்.

  கடுப்பான சின்மயி

  கடுப்பான சின்மயி

  இணையத்தில், அவ்வப்போது பல கருத்துக்களை பரப்பி வரும் சின்மயி குறித்து அவ்வப்போது மீம்ஸ்களும் பரவும் அதை பெரிதாக கருத்தில் கொள்ள மாட்டார். தற்போது, நெட்சஷன் ஒருவர் சின்மயியை மாமி என்று கூறி ஒரு மீம்ஸ் பதிவிட்டு இருந்தார். இந்த மீம்ஸை பார்த்து கடுப்பான சின்மயி, அதற்கு பதிலளித்து சின்மயி, ஜாதியை ஒழிக்கும் அவங்களே ஜாதி வெறி புடிச்ச மாமாஸ்.

  கைக்கூலிகள்

  கைக்கூலிகள்

  இவங்க குரூப்ல ஒருத்தரை குறைசொல்லி விட்டால் போதும், இவர்களது கைக்கூலி அவர்களது இஷ்டத்திற்கு எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுவார்கள் என்றும் கூறியிருந்தார். இவங்க கைக்கூலி, அவங்க ஜாதி வெறி அப்படி இப்படினு எல்லாம் உருட்ட முடியுமோ உருட்ட வேண்டியது. இப்படித்தான் ஒரு சைக்கோ பத்து வருஷம் முன்னால உருட்டினான். எப்ப பார்த்தாலும் கொச்சை படுத்தி பேசறது தான் வேலை. இன்னிக்கி இந்த சைக்கோவுக்கு ஒரு அரசியல் கட்சியில பெரிய போஸ்டிங். நான் இப்படித்தான், இந்த ஆணியை வேணா ஹேமர் வெச்சு எடுங்க தட்டுங்க நிறைய பார்த்தாச்சு என்று கூறியுள்ளார்.

  உனக்கெல்லாம் மரியாதை கிடையாது

  உனக்கெல்லாம் மரியாதை கிடையாது

  மேலும், மற்றொரு பதிவில், நான் பதிவிடும் கருத்து பிடிக்கலை என்றால் விமர்சனம் செய்.ஒருத்தரை மதிக்கிற தன்மை எனக்கு இருக்குது. என்னை மாமி, அது இதுன்னு சொன்னா உனக்கெல்லாம் மரியாதையே கிடையாது என்று சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்கள் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  English summary
  Chinmayi denounced Netizens for teasing her as Maami
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X