பெண்களுக்கு தாலி கட்டாயமில்லை.. சின்மயி கணவரின் சர்ச்சை பேச்சு!

சென்னை: பாடகி சின்மயின் கணவரும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன், தாலி அணிவது பெண்களின் விருப்பம், திருமணத்திற்கு பின் பெண்கள் தாலி அணிய வேண்டும் என்கிற காட்டாயம் இல்லை கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

நடிகரான ராகுல் ரவீந்திரன் "அந்தல ராக்ஷசி" என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து சமந்தா நடித்த "மாஸ்கோவின் காவேரி" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பேசப்படவில்லை. இதையடுத்து பாலிவுட்டிக்கு சென்ற ராகுல் ரவீந்திரன், "ஜிக்ரா" என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார்.

சமந்தாவின் நண்பர்: நடிகை சமந்தாவின் நெருங்கிய நண்பரான இவர் பற்றி சமந்தா ஒரு பேட்டியில் பெருமையாக பேசி இருந்தார். நான் மையோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட போது, அதில் இருந்து கஷ்டப்பட்டு மீண்டும் வந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் காலை மாலை என இரண்டு வேளையும் அவர் நேரில் வந்து என்னை சந்தித்து ஆறினார். அதனால் தான் அந்த கடினமான காலகட்டத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதை நான் நட்பு என்று மட்டும் சொல்ல மாட்டேன். எனக்கு அவர் சகோதரர். என்னுடைய சொந்த ரத்தம் மாதிரி. என்னுடைய குடும்பத்தில் அவர் ஒருவர் என்று சமந்தா நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

Chinmayi Rahul Ravindran Thali
Photo Credit:

The Girlfriend: இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான ராகுல் ரவீந்திரன் தற்போது, ராஷ்மிகா மந்தனாவை வைத்து 'The Girlfriend' என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 7ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகி

தாலி அணிவது பெண்களின் விருப்பம்: இந்நிலையில், இயக்குநர் ராகுல் ரவீந்திரன் ஒரு பேட்டியில், திருமணத்திற்குப் பிறகு, நான் என் மனைவி சின்மயிடம் தாலி அணிவதா இல்லையா என்பது உன்னுடைய விருப்பம் என்று சொன்னேன். நான் அதை அணிய வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஆண்களுக்கு திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அதே நேரத்தில் பெண்களுக்கு திருமணமானதற்கான அறிகுறி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. சிலர் இந்த கருத்தை ஆதரித்த போதும், சிலர், மங்கல்சூத்ரா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் உறவுகளும் சமூக வாழ்க்கையும் சில விதிமுறைகள் மற்றும் எல்லைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்திலும் நாம் வாழ்கிறோம். நீங்கள் சமூகத்தில் இருக்கும்போது, ​​அந்த விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் தனிப்பட்ட இடத்தில், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X