twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதென்ன கூத்து..? தவறாகக் காண்பித்த கோவிட் 19 கிட்.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு இல்லையாம்!

    By
    |

    ஐதராபாத்: பிரபல ஹீரோவுக்கு கொரோனா கிட்டின் தவறால், பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தது இப்போது தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா, இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    பலர் உயிரிழந்து வருகின்றனர். இப்போது இதன் தாக்கம் குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் மக்கள் இன்னும் அச்சத்தில் இருக்கின்றனர்.

    யாரையும் விடவில்லை

    யாரையும் விடவில்லை

    இந்தத் தொற்று நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் என யாரையும் விடவில்லை. மலையாள நடிகர் பிருத்விராஜ், தமன்னா, ஐஸ்வர்யா ராய், ராஜமவுலி, விஷால், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

    ஆச்சாரியா ஷூட்டிங்

    ஆச்சாரியா ஷூட்டிங்

    சமீபத்தில், தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகர் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார். இந்நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு, கடந்த திங்கட்கிழமை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 'ஆச்சாரியா படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பு, முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    என்னைச் சந்தித்தவர்கள்

    என்னைச் சந்தித்தவர்கள்

    நானும் செய்து கொண்டேன். எதிர்பாராதவிதமாக பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. ஆனால் எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 5 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள், கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

    டெஸ்டில் நெகட்டிவ்

    டெஸ்டில் நெகட்டிவ்

    இதனால், அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா டெஸ்ட்டில் தனக்கு நெகட்டிவ் என வந்ததாக நேற்று தெரிவித்துள்ளார்.

    காட்டிய அக்கறை

    காட்டிய அக்கறை

    'மருத்துவர்கள் குழு எனக்கு மூன்று வெவ்வேறு சோதனைகளை செய்தது. அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. முந்தைய முடிவு, கொரோனா கிட்டில் (RT PCR kit) ஏற்பட்ட தவறாக இருந்திருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் காட்டிய அக்கறை மற்றும் அன்புக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chiranjeevi took to social media to announce that he is perfectly alright and has tested negative for the virus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X