Just In
- 35 min ago
எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
- 1 hr ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 1 hr ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
Don't Miss!
- News
சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கமல்ஹாசன்!
- Finance
தங்கம் விலை செம சரிவினைக் காணலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. எவ்வளவு குறையும்..!
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. நள்ளிரவில் தாயுடன் நீண்ட நேரம் வாக்குவாதம்.. விசாரணையில் திடுக்!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முரண்பட்ட தகவல்
பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் 5வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அதில் அவர் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

பதிவு திருமணம்
சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

போனில் வாக்குவாதம்
தற்கொலை செய்த அன்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நள்ளிரவில் வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிய பிறகு குளித்துவிட்டு உடைகளை மாற்றியுள்ளார். அப்போது அவர் தனது தாயாருடன் செல்போனில் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மன உளைச்சல்
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஹேம்நாத் அவர் தந்தை, சித்ரா படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை
இந்நிலையில் பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யா இன்று விசாரணையை தொடங்குகிறார். ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
மறைந்த நடிகை சித்ரா, விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர். அதில் முல்லை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே அந்த கேரக்டர் வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரேத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் தங்கி இருந்தார்.