அசத்தலான சியான் 60 அப்டேட்...முக்கிய நாளில் இந்த அறிவிப்பா?

சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் சியான் 60 படத்தில் முதல் முறையாக விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார்கள். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது.

போஸ்டர் வெளியிட்டதோடு சரி அதற்கு பிறகு இந்த படம் பற்றிய தகவல்கள் அதிகம் வெளி வரவே இல்லை. அவ்வப்போது துருவ் விக்ரம் தான் அப்பாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை வெளியிட்டு வருகிறார். இருந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையவில்லை.

டார்ஜிலிங் சென்ற படக்குழு

டார்ஜிலிங் சென்ற படக்குழு

தற்போது இந்த படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டாக துருவ் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டாராம். சமீபத்தில் டார்ஜிலிங் சென்ற படக்குழு, அங்கு பெரும்பாலான பகுதிகளை எடுத்து வருகிறதாம். விரைவில் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை படக்குழு எடுத்து முடிக்க உள்ளதாம்.

அடுத்து இங்க ஷுட்டிங்கா

அடுத்து இங்க ஷுட்டிங்கா

அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்தியா - நேபாள எல்லையில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் இங்கு சிறிய பகுதி காட்சிகளை மட்டுமே படமாக்க கார்த்திக் சுப்பராஜ் திட்டமிட்டுள்ளாராம். வேகமாக ஷுட்டிங்கை முடித்து, அடுத்த வாரத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நாளில் முக்கிய அறிவிப்பா

இந்த நாளில் முக்கிய அறிவிப்பா

படப்பிடிப்பை முடித்த கையோடு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அநேகமாக ஆகஸ்ட் 15 அன்று சியான் 60 படத்தில் டைட்டில், ரிலீஸ் தேதி போன்ற முக்கிய அறிவிப்புக்களை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 வேடங்களில் விக்ரம்

3 வேடங்களில் விக்ரம்

கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் சியான் 60 படத்தில் துருவ், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். விக்ரம், மூன்று மாறுபட்ட ரோல்களில் நடிக்கிறாராம். அதில் ஒன்று வில்லன் கேரக்டராம். இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள்.

இவரும் இருக்காரா சியான் 60 ல்

இவரும் இருக்காரா சியான் 60 ல்

சமீபத்தில் சியான் 60 படத்தில் தானும் இணைந்துள்ளதாக மாஸ்டர் ராகவன் முருகன் சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார். சேதுபதி, றெக்க, மாரி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மாஸ்டர் ராகவன், தற்போது மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வனில் படத்திலும் நடித்து வருகிறார். இதில் இளம் வயது பாண்டிய மன்னன் ரோலில் தான் ராகவன் நடிக்கிறாராம்.

ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்

ரசிகர்களை குஷிப்படுத்திய அப்டேட்

சியான் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் இந்த படம் அவரது ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இதற்கு முன் இருமுகன் படத்தில் இரண்டு ரோல்களில் நடித்த விக்ரம், தற்போது 3 ரோல்களில் நடிக்க உள்ளது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X