சியான் 61 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்.. டிரெண்டாகும் பிக்ஸ்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கி உள்ள இயக்குநர் பா. ரஞ்சித் அடுத்ததாக சியான் 61 படத்தை இயக்குகிறார்.
Recommended Video
அதற்கான பிரம்மாண்ட பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித் மெட்ரா, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

கேன்ஸ் விழாவில் கெத்தாக
இந்தியா மட்டுமின்றி இயக்குநர் பா. ரஞ்சித் உலகம் முழுவதும் தனது சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாகி விட்டார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கோட் சூட் மாட்டிக் கொண்டு கபாலி ரஜினி போல ரெட் கார்ப்பெட்டை கலக்கி இருந்தார். ஒரு பக்கம் நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்தாலும், இன்னொரு புறம் தனது படங்களை தரமானதாக கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியையும் தொடர்ந்து அவர் மேற்கொண்டு வருகிறார்.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை சக்சஸ்
நடிகர் ஆர்யா முரட்டுத் தனமான உடம்புடன் சார்பட்டா பரம்பரை பட்த்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். பீரியட் படமாக வந்த அந்த படத்தில் நடித்த ரங்கன் வாத்தியார், வேம்புலி, டேன்சிங் ரோஸ் என பல அற்புதமான கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நட்ச்த்திரங்கள் நகர்கிறது எனும் படத்தை தனது தயாரிப்பில் இயக்கி முடித்துள்ள பா. ரஞ்சித் அடுத்ததாக சியான் விக்ரமை வைத்து மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க படத்தை இயக்க ஆயத்தமாகி விட்டார்.

பீரியட் படம்
மைதானம் எனும் தலைப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 18ம் நூற்றாண்டில் நடைபெறும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கதையாக உருவாகும் இந்த படம் 3டியில் வெளியிடவும் ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமான முறையில் போடப்பட்டு அதன் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

சியான் 61 பட பூஜை
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ள சியான் 61 படத்தி பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்டது. விழாவில் நடிகர் சிவகுமார் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர். சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், கோப்ரா இசை வெளியீட்டு விழா மற்றும் தற்போது சியான் 61 பட பூஜையில் விக்ரம் பங்கேற்றுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசை
அசுரன், சூரரைப் போற்று படங்களுக்கு அசத்தலான இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசை அமைக்க போகிறார். ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில், இந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளார் பா. ரஞ்சித். சார்பட்டா பரம்பரை படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

படக்குழு
'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை எடிட்டர் செல்வா தொகுக்கிறார். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார். இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள். பா. ரஞ்சித் இயக்கும் 'சீயான் 61' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











