Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரோலக்ஸ் கேரக்டருக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ்... தப்பு பண்ணிட்டீங்களே சீயான்... விக்ரம் 2வில் சர்ப்ரைஸ்
சென்னை: கோலிவுட்டில் பல வருடங்களாக நிலையான அங்கீகாரத்துக்காக போராடிய விக்ரம், சேது படத்தில் சிறப்பாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
சேது படத்தில் இருந்து சீயான் விக்ரம் என அழைக்கப்படும் அவர், தற்போது கோலிவுட்டின் டாப் மோஸ்ட் வான்டட் நடிகராக கலக்கி வருகிறார்.
கடந்தாண்டில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கமலின் விக்ரம், விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படங்களில் வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துவிட்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது.
விக்ரம்
கமல்
பாணியில்
மம்முட்டி
கொடுத்த
சர்ப்ரைஸ்...
மேடையில்
துள்ளிக்
குதித்த
ரோர்சாக்
நடிகர்!

மாஸ் காட்டிய ரோலக்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படம் கடந்தாண்டு ரிலீஸான பின்னர், எதிர்பார்த்ததை விடவும் மெஹா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் வெரைட்டியாக நடித்திருந்த இந்தப் படத்தின் இறுதியில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்து மரண மாஸ் காட்டியிருந்தார் சூர்யா. ரொம்பவே டெர்ரரான வில்லாதி வில்லனாக மிரட்டிய சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மிஸ் பண்ண விக்ரம்?
விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருந்தது ரொம்ப சஸ்பென்ஸாக இருந்தது. விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தான் சூர்யா நடித்துள்ளதாக கமல் அறிவித்தார். மேலும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் கிளைமேக்ஸில் வந்தது ரசிகர்களுக்கே சர்ப்ரைஸாக அமைந்தது. இந்நிலையில், இந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது சீயான் விக்ரம் என தகவல் கிடைத்துள்ளது. ரோலக்ஸ் கேரக்டருக்கு விக்ரம் தான் சரியாக இருப்பார் என லோகேஷ் விரும்பியதாகவும், ஆனால் அவர் சில காரணங்களால் நடிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

தளபதி 67 வில்லன்
ரோலக்ஸ் கேரக்டரில் விக்ரம் நடிக்க மறுத்த பின்னரே அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றுவிட்டதாம். அதுமட்டும் இல்லாமல் லோகேஷ் தற்போது இயக்கி வரும் தளபதி 67 படத்திலும் வில்லன் கேரக்டருக்கு விக்ரமிடம் சென்று பேசியுள்ளார். ஆனால் தளபதி 67 படத்திலும் வில்லனாக நடிக்க விக்ரம் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் தளபதி 67 படத்தில் கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விக்ரம் 2வில் விக்ரம்
தளபதி 67 படத்தை தொடர்ந்து கார்த்தியின் கைதி செகண்ட் பார்ட் இயக்கவுள்ளார் லோகேஷ். அதன் பின்னர் விக்ரம் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவிலும் தீவிரமாக உள்ளாராம் லோகேஷ், அதில் கமல், ஃபஹத் பாசில், சூர்யா ஆகியோர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக விக்ரம் செகண்ட் பார்ட்டில் சீயான் விக்ரமும் வில்லனாக நடிக்கவுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.