»   »  வந்தாளே மகராசி படத்திலேயே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த சோ

வந்தாளே மகராசி படத்திலேயே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த சோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த சோ அப்போதே அவரை பார்த்து எதிர்காலத்தில் அரசியலில் உனக்கு பெரிய இடம் உண்டு என்று தெரிவித்தார்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், சோ, ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்த படம் வந்தாளே மகராசி. 1973ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு ஜெயலலிதாவுக்கு ஜெய்ஷங்கரும், மற்றொரு ஜெயலலிதாவுக்கு சோவும் ஜோடியாக நடித்தனர்.

Cho predicts Jaya's future in Vanthale Maharasi movie

சோவின் மனைவியாக நடித்த ஜெயலலிதா உலகமே தெரியாத அப்பாவியாக இருப்பார். தன்னை யார் கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வார். சோவும், ஜெயாவும் சேர்ந்து அப்பாவித்தனமாக மம்மி மம்மி மாடர்ன் பிரெட் பாடல் எல்லாம் பாடுவார்கள்.

படத்தில் சோ ஜெயலலிதாவை பார்த்து எதிர்காலத்தில் உனக்கு அரசியலில் பெரிய இடம் உள்ளது என்று கூறுவார். அவர் கூறியது போன்றே ஜெயலலிதா தமிழகத்தையே ஆண்டார்.

சோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து அரசியல் ராஜ தந்திரியாக திகழ்ந்தார்.

English summary
Multi talented Cho predicted Jayalalithaa's political future in the movie Vanthale Maharasi that hit the screens in 1973.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil