twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகையே உலுக்கிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ.. ரியல் ஹீரோவாக மாறிய அவெஞ்சர்ஸ் ஹீரோ!

    |

    ஆஸ்திரேலியா: மார்வெல் உலகின் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரண நிதியாக ஒரு மில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ உலகையே உலுக்கியது. லட்சக்கணக்கான விலங்குகள், 25க்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த காட்டுத் தீக்கு இரையாகியுள்ளனர்.

    இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

    எப்போது ஆரம்பித்தது?

    எப்போது ஆரம்பித்தது?

    ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் சிறிய அளவில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீ தற்போது மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லட்சக்கணக்கான விலங்குகள், 25க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த காட்டுத் தீக்கு இரையாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிதான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோல்டன் குளோபில்

    கோல்டன் குளோபில்

    ஆஸ்திரேலிய காட்டுத் தீ விவகாரம் குறித்து உலகளவில் பல பிரபலங்கள் பேசி வருகின்றனர். தங்களால் முடிந்த நன்கொடைகளையும் கொடுத்து வருகின்றனர். நேற்று நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் நடிகை கேட் பிளான்கட் ஆஸ்திரேலிய காட்டுத் தீ குறித்து பேசினார்.

    தோர் நடிகர்

    தோர் நடிகர்

    மார்வெல் உலகின் அவெஞ்சர்ஸ் படங்களில் தோர் கடவுளாக நடித்து கலக்கியவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். ஆஸ்திரேலிய நடிகரான இவர், தனது சொந்த தாய் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எண்ணி மிகவும் வேதனை பட்டுள்ளார்.

    என்னால் முடிந்தது

    வெறும் வேதனையோடு ட்வீட் மட்டும் போடாமல், தன்னால் முடிந்த நிவாரண நிதி தொகையாக ஒரு மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோ பதிவை ஒன்றும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இது இப்படியே நிற்காது

    இது இப்படியே நிற்காது

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ இப்படியே நிற்காது, எதிர்காலத்திலும் இதைவிட பயங்கரமான இயற்கை சீரழிவுகள் ஏற்படும். புவி வெப்பமாகி வருகிறது. இதுபோன்று இனிமேல் நடக்காமல் சரியான தீர்வு ஒன்றை இந்த விசயத்தில் சிந்தித்தே ஆகவேண்டும். உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

    உதவிக்கரம் நீட்டும் ஹாலிவுட் பிரபலங்கள்

    உதவிக்கரம் நீட்டும் ஹாலிவுட் பிரபலங்கள்

    ஆஸ்திரேலிய காட்டுத் தீ விவகாரத்தில் முன்னதாக ஹாலிவுட் பிரபலங்களான, பிங்க், நிக்கோல் கிட்மேன் மற்றும் செலிஸ்ட் பார்பர் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த பணத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.

    English summary
    Hemsworth also warned the problems won’t end any time soon. “The bushfires in Australia have caused massive devastation.:
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X