மன்னிப்பு கடிதம் கேட்கும் சிபி... தர மறுக்கும் பிரியங்கா, பாவ்னி
சென்னை : பிக்பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு 50 நாட்கள் கடந்து விட்டது. துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக 13 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இதுவரை அபிஷேக் ராஜா மற்றும் அமீர் ஆகியோர் அடுத்தடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அடம்பிடிக்கும் பிரியங்கா
பிக்பாஸ் சீசன் 5 எட்டாவது வார தலைவராக அபினய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு பள்ளியாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களாக மாறி உள்ளனர். நேற்று மாணவியான பிரியங்கா, வார்டனாக இருக்கும் சிபியின் பேச்சை கேட்காமல் அடம்பிடிக்கிறார்.

தண்டனை கொடுத்த சிபி
இதனால் தண்டனை வழங்கி பிரியங்கா வீட்டிற்குள் வர கூடாது என சொல்கிறார் சிபி. இதை ஈகோ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் பிரியங்கா, இனி அவனே கூப்பிட்டாலும் நான் வீட்டிற்குள் வர மாட்டேன் என்கிறார். பிடிவாதமாக இரவு முழுவதும் வெளியிலேயே படுக்கிறார் பிரியங்கா.

மன்னிப்பு கடிதம் கேட்கும் சிபி
இந்நிலையில் நிகழ்ச்சியின் 52 வது நாளான இன்று பிரியங்காவிடம், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் செல்லலாம் என்கிறார் சிபி. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார் பிரியங்கா. தொடர்ந்து பாவ்னியும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். பாவ்னியும் வெளியே சென்று படுக்கிறார்.

சிபியின் விளக்கத்தை ஏற்கும் பிரியங்கா
மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என மீண்டும் சிபி கேட்கிறார். ஆனால் முதலில் ஏற்க மறுக்கும் பிரியங்கா, பிறகு தனது தரப்பு விளக்கத்தை சிபி சொன்ன பிறகு, மன்னிப்பு கடிதம் அளிக்க ஒப்புக் கொள்கிறார் பிரியங்கா. அதன் பிறகு அவர் வீட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











