»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சங்கக் கடனை அடைப்பது தொடர்பாக நடிகர், நடிகைகளின் அவசரக் கூட்டம் சென்னையில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்பட நடிகர், நடிகைகளின் எதிர்கால நலத் திட்டங்களையும், திரைப்படத் துறையில் அவர்களுக்கு ஏற்படும்நெருக்கடிகள் பற்றியும் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதற்காக நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலைசிறப்புக் கூட்டம் நநிடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கக் கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படவுள்ளது. இக் கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாத நடிகர், நடிகைகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களதுகருத்துக்களைக் கூறலாம். வெளியூர் படப்பிடிப்புகளில் உள்ள நடிகர், நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுஇக் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

Read more about: actors, actress, cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil