Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர்களிடையே வலுக்கும் மொழி சண்டை… பிரபல நட்சத்திரங்கள் கருத்து
சென்னை : சமீபகாலமாக மத்திய அரசாங்கத்தில் இருக்கும் சிலர் ஹிந்தியை இந்திய மொழியாக்க முயற்சி செய்து பேசி வருவதால் சமூகத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
இதன் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் மத்தியில் நடந்த ட்விட்டர் பதிவு சண்டை இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
தீப்பொறி
பறக்க
மாஸ்
காட்டும்
யாஷ்...
'’கேஜிஎஃப்
2
மேக்கிங்
வீடியோ’’

சுதீப் பேச்சு
கன்னட சூப்பர் ஸ்டாரான சுதீப் தென்னிந்திய மொழிகளில் நடித்து, மொழி பாகுபாடு இல்லாமல் பல ரசிகர்களைப் பெற்றவர். கேஜிஎப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் வெற்றியை குறிப்பிட்டு " கன்னடத்தில் pan-india திரைப்படம் தயாரித்ததாக சொன்னீர்கள். நான் ஒரு சிறிய மாற்றம் செய்கிறேன். இனி ஹிந்தி தேசிய மொழி அல்ல. இந்தியில் pan-india படங்கள் தயாரிக்கிறார்கள். தமிழ் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தாலும் ஜெயிக்க திண்டாடுகிறார்கள். இன்று நாங்கள் அனைவரும் ரசிக்கும் படத்தை தயாரித்து உள்ளோம் " என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அஜய் தேவகன் பதில்
மொழி சார்ந்து சுதீப் போட்ட ட்விட்டர் பதிவிற்கு அஜய் தேவ்கன் பதில் தந்துள்ளார். நண்பா இந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னடத்தில் பாடத்தை எடுத்து அதை எதற்கு இந்தியில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறீர்கள். ஹிந்தி நமது தேசிய மொழி. இந்தி நமது தாய்மொழி " என குறிப்பிட்டுள்ளார். பின்னர் இருவரும் சமாதானம் ஆகி ஆளுக்கு ஒரு போஸ்ட் போட்டுக் கொண்டு சண்டையை முடித்துக் கொண்டனர்.

சோனு சூத் கருத்து
ஹிந்தி தேசிய மொழி சார்ந்த விவாதங்கள் போய்க்கொண்டிருக்க நடிகர் சோனு சூட் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். " என்னை பொருத்தவரை இந்தி தேசிய மொழி அல்ல. இந்தியாவில் ஒரே மொழி தான் அது பொழுதுபோக்கு தான். நீங்கள் எந்த துறையாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் மக்களை entertain செய்தால் மக்கள் உங்களை ரசிப்பார்கள். மதிப்பார்கள். உங்களை ஏற்பார்கள் " என தெரிவித்துள்ளார். சோனு சூட் அனைத்து தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு பெரிதும் உதவிய நடிகர் ஆவார்.

ஆர்ஜிவி - கங்கனா
அஜய் தேவ்கன் மற்றும் சுதீப் மத்தியில் நடந்த வாக்குவாதத்தில் ராம்கோபால்வர்மா சுதீப் பக்கம் நின்று அவருக்கு சப்போர்ட்டாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். " பாலிவுட் நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் மீது பொறாமை ஏற்பட்டுள்ளது. தங்களின் இருப்பின் மீது பயம் வந்துள்ளது. வரும் காலத்தில் இது இன்னமும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார் ". இவரைப்போலவே இந்தி நடிகை கங்கனா ரனாவத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். " உருது மொழியே உண்மையான தேசிய மொழி. மற்ற மொழிகள் ஆன இந்தி தெலுங்கு தமிழ் என மற்ற மொழிகள் இதிலிருந்து பிறந்தவையே என குறிப்பிட்டுள்ளார். உருது ஹிந்தி மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது தமிழ் மொழியே என வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன