சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டு திருமணம்...யாருக்கெல்லாம் அழைப்பு தந்திருக்கிறார் தெரியுமா ?

சென்னை : பிரபல சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் தியேட்டர் அதிபர் அன்புச்செழியன் - ராஜேந்திரன் ஐஏஎஸ் இல்லத் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக விஐபி.,க்கள் பலரை நேரில் சந்தித்து இன்று திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார் அன்புச்செழியன்.

இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணுக்கும் பைனான்சியர் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கும் பிப்ரவரி 21ம் தேதி அன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் விபரம்

மணமக்கள் விபரம்

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற சுஷ்மிதா, அதைத் தொடர்ந்து எம்பிஏ படித்தார். 25 வயதே ஆகும் இவர் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து பல இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார். குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன் தான் சரண். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் பங்கேற்கும் திருமணம்

பிரபலங்கள் பங்கேற்கும் திருமணம்

சரண் பி டெக் மற்றும் எம்பிஏ முடித்து சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார். 25 வயதில் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளார்.திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கோவிட் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் அழைப்பு

யாருக்கெல்லாம் அழைப்பு

மகள் திருமணத்திற்காக, தனது சம்பந்தி ராஜேந்திரனுடன் சென்று விஐபி.,க்கள் பலரை நேரில் சந்தித்து இன்று திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளார் அன்புச்செழியன். தமிழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் மகனும் எம்எல்ஏ.,வும் சினிமா நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளனர்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்

பிரம்மாண்ட ஏற்பாடுகள்

திரையுலகை சேர்ந்த விஐபி.,க்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சென்னை மற்றும் மதுரையில் உள்ள பைனான்சியர் அன்புச்செழியனுக்கு நெருக்கமானவர்கள் என பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X