Vijay X Suriya: விஜய்க்கு எதிராக.. திமுகவில் சேர்கிறாரா சூர்யா?.. அந்தணன் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஜகா வாங்கிய பின்னர் தமிழ் திரைத்துறையிலிருந்து அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவர் என்றால் அது, விஜய் தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி வரும் 21ஆம் தேதி தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல் ஒன்று தற்போது பூதாகரமாக பேசுபொருளாக மாறியிருக்கிறது. அது என்னவென்றால், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் திமுக, கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நடிகர் சூர்யாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவும் பாஜகவும் மிகவும் வலுவாக இருப்பதால் சூர்யாவை களமிறக்கி தங்களை பலப்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார் என்றும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது. அதே நேரத்தில் சூர்யாவும் தனது ரசிகர்களை சந்திக்கும் போது எல்லாம், உங்கள் அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது என்று கூறுகிறாராம். அவர் அப்படி கூறுவது, அரசியலில் அவர் களமிறங்குவது தான் எனவும் கூறப்படுகிறது.

Cinema Journalist Anthanan Talks About Suriya Will Join DMK to Against TVK Vijay
Photo Credit:

திமுக பிளான்: விஜய் அரசியலில் களமிறங்கி திமுகவை கடுமையாக சாடி வருவதால், விஜய்க்கு எதிராக சூர்யாவை களமிறக்க திமுக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சூர்யா திமுகவிலோ அல்லது தேசிய கட்சிகளிலோ தன்னை இணைத்துக் கொள்வாரா என்றால் அது கேள்விக்குறிதான். தனியாக கட்சி தொடங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

சூர்யாவுக்கு இருக்கும் ஆப்ஷன்ஸ்: சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய், சினிமாவே வேண்டாம் நான் அரசியலுக்குப் போகிறேன் என முடிவெடுத்துவிட்டார், அஜித்தும் கார் ரேஸில் ரொம்பவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர்கள் இருவரும் இல்லாத போது, அந்த இடத்தை நிரப்புவதற்கு அதிக தகுதி வாய்ந்த நடிகராக சூர்யா இருப்பார். அப்படி இருக்கும்போது, சூர்யா உடனடியாக அரசியலுக்கு வருவாரா என்பது கேள்விக்குறிதான். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் 2026 தேர்தலில், சூர்யா களமிறங்கலாம் அல்லது கார்த்தி அல்லது சிவக்குமார் என அவர்களது குடும்பத்தில் யாராவது களமிறங்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. சூர்யா தேர்தலில் நின்றாலே வாக்கு செலுத்துவார்களா எனத் தெரியவில்லை. இதில் சிவக்குமார் நின்றால் எப்படி ஓட்டு விழும்?.

Cinema Journalist Anthanan Talks About Suriya Will Join DMK to Against TVK Vijay
Photo Credit:

ஓட்டாக மாறுமா? : சூர்யாவுக்கு கண்ணுக்கு எதிராக ஒரு உதாரணமாக வடிவேலு உள்ளார். வடிவேலு தனது சினிமா கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது திமுகவுக்கு ஆதரவாக பேசினார். வடிவேலுவை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டார்கள். அவையெல்லாம் ஓட்டாக மாறியதா என்றால், இல்லை. அதில் வடிவேலு தனது தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொண்டார். அப்படி வடிவேலுவை போல் தனது கெரியரை காலி செய்துவிட்டு சூர்யா ஒரு கட்சியில் சேருவாரா என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக உள்ளது. ஒரு பத்திரிகை எழுதிய தகவலை பேசிப் பேசி பலரும் உண்மையாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X