»   »  சின்ன தவறு செய்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்! - பார்த்திபன்

சின்ன தவறு செய்தால் கூட கண்டுபிடித்து விடுவார்கள்! - பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு சினிமா ரசிகர்கள் மிகவும் கவனமாகப் பார்க்கிறார்கள். சிறு தவறு செய்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றார் இயக்குநர் பார்த்திபன்.

மாவீரன் கிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதைச் சொல்லலாம்... 'நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150கிமீ வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை' என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது.

Cinema People must be carefull in all aspects - Ra Parthiban

யுகபாரதி நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன் என்று கூறினார். ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததனால்தான் என்னால் அந்த வசனத்தை நன்றாகப் பேச முடிந்தது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் பர்ஃபெக்ட்டாக படத்தை இயக்குபவர்.

'இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள் , பர்ஃபெக்ஷனுக்கு 8 நாள் ஆகும்' என்று கூறினார். அதே போல் பர்ஃபெக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன்.

இப்படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா மிகச்சிறந்த நடிகை. ஏனென்றால் நான் அழவேண்டிய காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை கிளிசரின் போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறாமல் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் நடித்தார். படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார்," என்றார்.

சுசீந்திரன்

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், "இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களைத் தந்துள்ளார். எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும்.

விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெண்ணிலா கபடி குழு படத்துக்குப் பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர்.

விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும்," என்றார்.

English summary
Director - Actor Ra Parthiban says that cinema people must be very careful in all aspects, because the people watching them closely.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil