twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரைவில் முடிவுக்கு வருகிறது சினிமா ஸ்ட்ரைக்?

    By Shankar
    |

    Recommended Video

    க்யூபுக்கு செக் வைக்கும் பக்கா பிளான்!- வீடியோ

    சென்னை: கடந்த நாற்பது நாட்களாக மூடிக் கிடக்கும் கோடம்பாக்கத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. விரைவிலேயே ஸ்ட்ரைக் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

    டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் அநியாயக் கட்டணம், திரையரங்குகளில் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடக்கும் கொள்ளைகள், மக்களை வதைக்கும் அதிகக் கட்டணங்கள், தயாரிப்பாளர்களை பாதிக்கும் நடிகர் நடிகையர் சம்பளம் என பல்வேறு விஷயங்களை சரிப்படுத்தி, திரைத்துறையில் புதிய ஒழுங்கைக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஸ்ட்ரைக்கை அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்.

    Cinema strike will be comes to an end soon

    நாற்பது நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பல நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முன் வைந்துள்ளனர். சூர்யா, கார்த்தி, விஷால் போன்றவர்கள் இதனை வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.

    தியேட்டர்களும் வசூல் குறித்த கணக்கு வழக்குகளை தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர்மயமாக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

    டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யுஎஃப்ஓ, பிஎக்ஸ்டி போன்றவை மட்டும் கட்டணக் குறைப்புக்கு உடன்படவில்லை. எனவே புதிய நிறுவனங்கள் மூலம் இந்த சேவையைப் பெற தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகிறது.

    இன்னும் தியேட்டர்களில் கட்டணக் குறைப்பு, பார்க்கிங் - தின்பண்ட விலைக் குறைப்பு போன்ற சில விஷயங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளன. விரைவில் இவற்றைச் சரிசெய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

    English summary
    Sources say that the ongoing film industry strike for various demands will be comes to an end soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X