»   »  மீடியாவை அவமதிக்கும் சினிமா... ட்விட்டர் தரும் தைரியமா?

மீடியாவை அவமதிக்கும் சினிமா... ட்விட்டர் தரும் தைரியமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் பத்திரிகைக்காரர் என்றாலே ஒரு ஜோல்னாப்பையோடும், குர்தாவோடும்தான் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்திரிகையாளர்கள் என்றாலே நேர்மையான பத்திரிகையாளர்கள் மட்டும்தான். எம்ஜிஆர் முதல் பாக்யராஜ் வரை பத்திரிகையாளராக நடித்து பத்திரிகைத் தொழிலை கவுரவப்படுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கும் சினிமாக்காரர்களுக்கு பத்திரிகையாளர்கள் என்றாலே இளக்காரமாக தெரிகிறது.

கம்பீரம் படத்தில் ஒரு காட்சியில் பத்திரிகையாளர்கள் கவர் வாங்குவது போல் காண்பித்து பின்னர் அதனை மாற்றிக் காட்டி, பத்திரிகையாளர்களின் நேர்மையைச் சித்தரித்திருப்பார்கள். ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து மீடியாக்கார்ர்களை கவர் வாங்குபவர்களாக மட்டுமே சித்தரிக்கிறது சினிமா.

Cinema turns against media because of social network

விசாரணை படத்தில் கவர் கொடுத்தால் போலி என்கவுண்டரை மறைத்து விடலாம் என்பதுபோல் வசனம் வரும். முத்துன கத்திரிகாய் படத்தில் கவருக்காக பத்திரிகையாளர் அலைவது போல் வசனம் வரும்.

கடந்த வாரம் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் கார்... என்று ஹீரோ ஆரம்பித்த உடனேயே அருகில் இருக்கும் பத்திரிகையாளர் கவரா எங்கே என்று ஆர்வத்துடன் கேட்பார். பத்திரிகையாளர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அது. இருந்தாலும் கூட இதே விசாரணையையும், ஆண்டவன் கட்டளையையும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவது அதே பத்திரிகைகள்தான்.

முத்துனா கத்திரிகாய் என்ற 'முன்னாள் காதலியின் மகளை காதலித்து கரம் பிடிக்கும்' அற்புதமான சித்திரத்தில் கவருக்காக பத்திரிகையாளர்கள் அலையோ அலை என்று அலைவதாக காட்டியிருப்பார்கள்.

கவர் வாங்காத பத்திரிகையாளரே இல்லை என்பதுபோல் காண்பிக்கப்படுவது நேர்மையான பத்திரிகையாளர்களையும் சேர்த்தே அசிங்கப்படுத்தும் செயல். வெற்றிமாறன், மணிகண்டன், சுந்தர்.சி மூவருமே தங்கள் வாழ்க்கையில் நேர்மையான பத்திரிகையாளரையே பார்த்ததில்லை என்று ஒப்புக்கொள்வார்களா?

யாருமே கவர் வாங்கவில்லை என்று சொல்லவில்லை. என்னவோ மீடியா என்றாலே கவர்தான் என்ற ரீதியில் பரப்பப்படுவது ஏன்? ஒருவேளை இந்த இயக்குநர்கள் எல்லாம் இப்படி கவர் கொடுத்துதான் வளர்ந்தார்களா?

இன்னொரு பக்கம் பேட்டிகள் கொடுப்பது, புரமோஷன்களுக்கு வருவது ஆகியவற்றைக் குறைத்துவிட்டு எல்லாவற்றையும் ட்விட்டரில் பார்த்துக்கொள்ளலாம் என்ற மிதப்புக்கு வந்துவிட்டார்கள் சினிமாக்காரர்கள். ட்விட்டரை ஃபாலோ பண்ணி செய்தி அடிக்கும் பத்திரிகையாளர்களும் இதற்கு ஒரு காரணம்.

ட்விட்டர் என்பது ஒரு தொழில்நுட்பம். இன்னொரு தொழில்நுட்பம் வந்தால் அது காணாமல் போய்விடும் இதனை சினிமாக்கார்ர்கள் உணர வேண்டும்!

English summary
Nowadays upcoming film directors are portraying all media people like paid journalists.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil