»   »  பிசியோ பிசியிலும் வைரமகன் இசையை வெளியிட்ட இபிஎஸ்: காரணம் 'அம்மா'வா?

பிசியோ பிசியிலும் வைரமகன் இசையை வெளியிட்ட இபிஎஸ்: காரணம் 'அம்மா'வா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைரமகன் பட பாடல்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

கோபி காந்தி தயாரித்து நடித்துள்ள படம் வைரமகன். அவர் வீரக்கலை என்ற படத்தையும் தயாரித்து நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீஸாகும் நாளே டிவிடியும் வெளியிடப்படுகிறது.

CM EPS launches Vairamagan audio

அம்மா பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் வைரமகன். இந்த படத்தின் இசையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் சூழலில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. அரசு வேலைகள் தலைக்கு மேல் உள்ளது. இத்தனை பிசியான நேரத்திலும் இசை வெளியீட்டுக்கு நேரம் ஒதுக்கியுள்ளார் முதல்வர்.

இசை சிடியை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட அதை விவசாயிகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu CM Edappadi Palanisamy has launched the audio of Gopi Gandhi's upcoming movie Vairamagan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil