twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவாகிறது முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை... ஹீரோ யாரு தெரியுமா ?

    |

    சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையை விரைவில் சினிமாவாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதில் யார் நடிக்க போகிறார் என்ற விபரத்தையும் முக்கிய பிரபலம் வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    முதல்வர் Stalin-னின் வாழ்க்கை படமாகிறது !...Hero யாரு தெரியுமா ?|Filmibeat Tamil

    தமிழ் சினிமாவில் பயோபிக் வருகை அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் ஒரே சமயத்தில் சினிமாவாக எடுத்தனர். எம்ஜிஆர், பெரியார், காமராஜர், பாரதியார் என பலரின் வாழ்க்கையும் சினிமாவாக எடுக்கப்பட்டு விட்டது.

    Modern Love Mumbai : எனக்கு 60.. அவனுக்கு 30.. வித்தியாசமான காதல் கதை.. விவகாரமான ரோலில் சரிகா!Modern Love Mumbai : எனக்கு 60.. அவனுக்கு 30.. வித்தியாசமான காதல் கதை.. விவகாரமான ரோலில் சரிகா!

    சினிமாவாகும் ஸ்டாலினின் வாழ்க்கை

    சினிமாவாகும் ஸ்டாலினின் வாழ்க்கை

    அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க போகிறார்களாம். இந்த தகவலை வெளியிட்டிருப்பதும், இதை படமாக எடுக்க போவதும் வேறு யாரும் இல்லை நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் தான். ஸ்டாலின் பயோபிக் எடுக்கும் வேலைகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    டான் படம் பார்த்த உயதநிதி

    டான் படம் பார்த்த உயதநிதி

    நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் நேற்று ரிலீசானது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. டான் படத்தை பார்த்து விட்டு, உதயநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    எங்க அப்பாவும் சமுத்திரக்கனியும் ஒன்னு

    எங்க அப்பாவும் சமுத்திரக்கனியும் ஒன்னு

    அப்போது அவர் கூறுகையில், என் அப்பாவின் கேரக்டரும், டான் படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டரும் ஒன்று தான். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் அப்பா மிகப் பெரிய சினிமா விரும்பி. எல்லா படங்களையும் உடனடியாக பார்த்து விடுவார். ஆனால் நான் படம் எடுப்பதை அவர் விரும்பவில்லை. எதற்கு இயக்குனர் ஆக வேண்டாம் என தடுத்தார் அவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பத்தில் எனது இன்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, இந்திய சினிமா பயிற்சி பள்ளியில் சேர விரும்பினேன் என்றார்.

    இவர் தான் ஹீரோவா

    இவர் தான் ஹீரோவா

    விரைவில் ஸ்டாலின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் மிக விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி தற்போது அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சமுத்திரக்கனியும் உறுதி செய்துள்ளார்.

    யார் ரோலில் யார் நடிக்க போகிறார்

    யார் ரோலில் யார் நடிக்க போகிறார்

    டான், ஏகே 61 என அடுத்தடுத்து பெரிய படங்களில் சமுத்திரக்கனி கமிட்டாகி வரும் நிலையில் ஸ்டாலின் பயோபிக்கிலும் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக கூறப்படுவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் யாருடைய ரோலில் யார் நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும், திமுக தொண்டர்களும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அரசியல் வட்டாரத்திலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    English summary
    After watching Don movie, Udhayanidhi Stalin shared his review, My father character and Samuthirakani character was same from the movie. My father is a big cinema lover. But he refused me on becoming filmmaker. Sources said that CM M.K.Stalin's biopic to begins soon with Samuthirakani.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X