twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவை வழக்கறிஞர்களின் 'ரூ. 1 கோடி' சவாலை ஏற்குமா அட்லீ, விஜய் அன்ட் கோ? #Mersal

    By Siva
    |

    Recommended Video

    விஜய், அட்லீக்கு ரூ 1 கோடி சவால் விடும் கோவை வழக்கறிஞர்கள்- வீடியோ

    திருவனந்தபுரம்: சிங்கப்பூரில் இலவச மருத்துவம் செய்வதை நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி அளிப்பதாக கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளார்களாம்.

    மெர்சல் படத்தில் 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வாங்கும் சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவதாக விஜய் பேசியிருப்பார். இது உண்மை இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில தலைவர் டாக்டர் வி.ஜி. பிரதீப் குமார் கூறியிருப்பதாவது,

    டார்கெட்

    டார்கெட்

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொழிலை குறி வைக்கிறது மெர்சல். படத்தில் சொல்லப்பட்ட சில தகவல்கள் தவறானது. சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிப்பதாக ஒரு வசனம் உள்ளது. சிங்கப்பூரில் காஸ்ட் ஆஃப் லிவிங் மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

    சிகிச்சை

    சிகிச்சை

    சிங்கப்பூருக்கு பதில் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பும் சிலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். கோவையில் உள்ள சில வழக்கறிஞர்கள் மெர்சல் குழுவுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர்.

    சவால்

    சவால்

    சிங்கப்பூரில் இலவச மருத்துவம் அளிக்கப்படுவது உண்மை என நிரூபித்தால் அட்லீ, விஜய், வடிவேலு மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 1 கோடி தருகிறோம். இல்லை என்றால் எங்களுக்கு அவர்கள் ரூ. 1 கோடி அளிக்க வேண்டும் என்று கோவை வழக்கறிஞர்கள் குழு சவால் விட்டுள்ளது.

    கருப்பு ஆடு

    கருப்பு ஆடு

    அனைத்து துறைகளிலும் கருப்பு ஆடு உண்டு. அதற்காக மருத்துவ துறையில் உள்ள அனைவரும் கொள்ளையர்கள் என்று படத்தில் காட்டுவதா? படத்தை எடுத்தவர்களும் மாடர்ன் சிகிச்சை முறையை நம்பியிருக்கக்கூடும்.

    நெகட்டிவ்

    நெகட்டிவ்

    நெகட்டிவ் விஷயங்களை மக்கள் எளிதில் பிடித்துக் கொள்வார்கள். மருத்துவ துறை குறித்த நெகட்டிவ் விஷயங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது என்றார் பிரதீப்.

    English summary
    IMA Kerala state president Dr. V.G. Pradeep Kumar said that a section of lawyers in Coimbatore are ready to give Rs. 1 crore to Vijay, Atlee, Vadivelu and Mersal producers if they prove Singapore is providing free medical treatment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X