சென்னையின் ஹாட் ஸ்பாட்டில் பிரம்மாண்ட வீடு வாங்கிய காமெடி நடிகர்... விலை எவ்ளோன்னு தெரியுமா?
சென்னை: சின்ன திரையில் இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சந்தானம்.
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானம், தற்போது கோலிவுட்டின் டாப் காமெடி நடிகர்.
தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் சந்தானம், கொஞ்சம் ஆடம்பர பிரியர் என்பது பலருக்கும் தெரியாதது.
இந்நிலையில், சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் தான் நினைத்தபடி பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் சந்தானம்.

லொள்ளு சபா சந்தானம்
விஜய் டிவியில் இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்த செலிபிரிட்டிகளில் முக்கியமானவர் சந்தானம். விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானம், அப்படியே சினிமாவிலும் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கினார். ஹீரோக்களுக்கு இணையாக கொண்டாடப்பட்ட சந்தானத்துக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

ஹீரோ ஆசை யாரை விட்டது
முன்னணி நாயகர்களுடன் காமெடி பாட்னராக வலம் வந்த சந்தானத்துக்கு ஹீரோ ஆசை துளிர்விட்டது. இதனால், காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, கண்ணா லட்டு திண்ண ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அதன்பின்னர் முழுநேர ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், காமெடி வேடங்களில் நடிப்பதை அப்படியே நிறுத்திவிட்டார்.

லட்சியத்தை முடித்த சந்தானம்
கடந்தாண்டு டிக்கிலோனா, சபாபதி படங்களில் நடித்திருந்த சந்தானம், இந்தாண்டு குலுகுலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஏஜெண்ட் கண்ணாயிரம் ரிலீஸாகியிருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் கை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் காமெடி கேரக்டருக்கு மாறலாமா என்ற முடிவில் இருக்கிறாராம் சந்தானம். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய லட்சியத்தை முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி, சென்னையின் போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்ட வீடு வாங்கியுள்ளாராம் சந்தானம்.

செம்ம காஸ்ட்லியான பங்களா
சென்னையில் போயஸ் கார்டன் பற்றி சொல்லவே வேண்டாம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் தான் போயஸ் கார்டனின் அடையாளமாக காணப்படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தனுஷ், விஜய் ஆண்டனி, அட்லீ ஆகியோரும் போயஸ் கார்டனில் குடியேறிவிட்டனர். இந்நிலையில் தற்போது சந்தானமும் போயஸ் கார்டனில் வீடு என்ற அவரது கனவை நிறைவேற்றியுள்ளாராம். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான வீடு ஒன்று ஏலத்துக்கு வந்துள்ளது. அதனை அப்படியே தட்டித் தூக்கியுள்ளாராம் சந்தானம்.

ரசிகர்கள் வாழ்த்து
சந்தானம் வாங்கியுள்ள பிரம்மாண்டமான வீடு, பல கோடிகளுக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்டமான வீடு, ரோல்ஸ் ராய்ஸ் கார் என ஆடம்பரமாக வாழ்ந்து வரும் சந்தானம், இப்போது போயஸ் கார்டனிலும் வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் சந்தானத்துக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். சந்தானத்தின் இந்த வளர்ச்சி கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம். காமெடியனாக நடிக்கும் போதே கோடிகளில் சம்பளம் வாங்கிய சந்தானம், இப்போது போயஸ் கார்டனில் வீடு வாங்கியதெல்லாம் பெரிய விஷயமில்லை என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











