Don't Miss!
- News
50+.. அதென்ன "கிரீம்".. ஜாடை வேற ஒரே மாதிரி.. நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்தால்.. ஐயோ
- Sports
2023ஆம் ஆண்டின் சிறந்த கேட்ச்.. எரிமலை போல் வெடித்த சூர்யகுமார்.. ஃபில்டிங்கால் ஆஃப் செய்த நியூசி
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!
சென்னை : நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மட்டுமின்றி காமெடி ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
கடந்த 2009ல் அமீர் லீட் கேரக்டரில் நடித்து வெளியான யோகி என்ற படத்தில் அறிமுகமான பாபு, யோகி பாபுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதனிடையே இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி, சூர்யா 42 படத்தில் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாட்டத்தில் யோகிபாபு ஈடுபட்டார்.
மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிக்கும் 'பாம்பாட்டம்'..ஹாலிவுட் தரத்திற்கு மிரட்டிய டிரைலர்!

காமெடி நடிகர் யோகிபாபு
நடிகர் யோகிபாபு கடந்த 2009ல் வெளியான யோகி என்ற திரைப்படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமீர் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியானது யோகி படம். இந்தப் படத்தில் நடித்த பாபு, தற்போது யோகி பாபுவாக முன்னணி காமெடியனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

காமெடி ஹீரோவாக சிறப்பு
இது மட்டுமில்லாமல் மண்டேலா, கூர்க்கா என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக சின்னத்திரையிலும் 6 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட யோகிபாபு, அதன் அறிமுகத்தாலேயே பெரியத் திரையில் கால்பதித்து தற்போது சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்றுள்ளார். இதனிடையே சின்னத்திரை மற்றும் பெரியத் திரை என 19 ஆண்டுகளை கடந்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
சமீபத்தில் லவ் டுடே படத்தில் நடித்துள்ள யோகிபாபு நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. வரும் டிசம்பர் 9ம் தேதி யோகிபாபு நடிப்பில் தாதா படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தூக்குதுரை உள்ளிட்ட படங்களும் ரிலீசாக உள்ளன. இதனிடையே தாதா படத்தில் யோகிபாபு ஹீரோ என்று கருதப்பட்ட நிலையில், படத்தில் நிதின் சத்யாதான் ஹீரோ என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

சூர்யா 42 குழுவினருடன் கொண்டாட்டம்
இதனிடையே தனது 19 ஆண்டுகால திரைத்துறை பயணத்தை சூர்யா 42 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் யோகிபாபு. படத்தின் இயக்குநர் சிவாவுடன் யோகிபாபு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இணைத்துள்ளார். மேலும் இந்தப் பயணத்தில் தன்னுடைன் பயணித்த அனைத்து இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணி
அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் யோகிபாபுவை ரசிகர்களை தொடர்ந்து கண்டு களித்து வருகின்றனர். இவரது கோலமாவு கோகிலா, மண்டேலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கொண்டாட செய்தது. தற்போது யோகிபாபுவின் கால்ஷீட்டிற்காக சூர்யா 42 படக்குழுவினர் காத்திருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.