Don't Miss!
- News
பாஜகவின் 2 டீல்.. எடப்பாடிக்கு வேற வழியே இல்ல.. இறங்கி வந்துட்டாரே.. உடைக்கும் அரசியல் விமர்சகர்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Sports
இந்திய அணிக்கு அடித்த செம லக்.. மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்.. பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
படம் எடுத்து போண்டியானேன்..வீட்டை விற்று வாடகை வீட்டில் இருக்கிறேன்.. கண்கலங்கிய கஞ்சா கருப்பு!
சென்னை : காமெடி நடிகரான கஞ்சா கருப்பு படம் எடுத்து போண்டியானேன் என ஒரு பேட்டியில் கண்கலங்கி உள்ளார்.
2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்தே இவருடைய பெயர் கஞ்சா கருப்பு ஆனது.
பிதாமகன் படத்தைத் தொடரந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, பம்பர கண்ணாலே, சண்டக்கோழி என பல படங்களில் நடித்தார்.
ஒருவரை உருகி உருகி காதலித்தேன்...காதலன் குறித்து கண்கலங்கி பேசிய ஷிவின்!

கஞ்சா கருப்பு
சிவகங்கை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, சிசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்று வணிக ரீதியாக வசூலையு வாரிக்குவித்தது. இத்திரைப்படத்தில் காசி என்ற ரோலில் நடித்து ஸ்கோர் செய்திருந்தார் கஞ்சா கருப்பு.

முன்னணி நடிகர்களின் படங்களில்
விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால்,சசிக்குமார், அருண்விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கறுப்பு 2010ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடனாளி ஆனேன்
ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு , 2014ம் ஆண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கே இவரால் தாக்குபிடிக்க முடியாததால், 14 நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

படம் எடுத்து போண்டியானேன்
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு, படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு பலர் ஆலோசனை சொன்னார்கள். நான் அதை கேட்கவில்லை. கையில் இருந்த பணம் கரைந்து போயி படம் பாதி முடிந்தபோதுதான் எனக்கு எல்லாமே தெரிந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் என்று என் படத்தின் இயக்குநர் என்னிடம் கூறினார்.

வீட்டை விற்றுவிட்டேன்
நான் சினிமாவிற்குள் நுழைய நிறைய கஷ்டப்பட்டு, இறுதியில் பட வாய்ப்புகள் வந்து உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய பாலா - அமீர் இல்லத்தை விற்று படம் தயாரித்தேன். இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். இயக்குநர் சொன்னது போல எனக்கு எதையும் தாங்கும் இதயம் இருப்பதால் வீடு போனதை பற்றி கவலைப்படவில்லை என்றார் கஞ்சா கருப்பு.