»   »  ஃபேஸ்புக் லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்: அதிர்ச்சி வீடியோ

ஃபேஸ்புக் லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல பாடகர்: அதிர்ச்சி வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
லைவில் சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்த பாபன்- வீடியோ

மும்பை: பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பாபன் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

வாய்ஸ் இந்தியா கிட்ஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் பாடகர்கள் ஷான், ஹிமேஷ் ரேஷமய்யா மற்றும் பாடகரும்-இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பாபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தார்.

குழந்தைகள்

குழந்தைகள்

ஃபேஸ்புக் லைவில் பல குழந்தைகளுடன் பாபன் ஹோலி கொண்டாடினார். வாய்ஸ் இந்தியா கிட்ஸ் போட்டியாளர்களுடன் ஹோலி கொண்டாடிய பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் வண்ணப்பொடியை தடவினார்.

சிறுமி

சிறுமி

சிறுமியின் முகத்தில் வண்ணப்பொடியை தடவிய பாபன் திடீர் என்று அவரின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.

வைரல்

வைரல்

பாபன் சிறுமிக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரூனா புயான் அதிர்ச்சி அடைந்தார்.

புகார்

புகார்

மைனருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பாபன் மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார் ரூனா. பாபன் பாலியல் குற்றம் செய்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
Supreme Court lawyer Runa Bhuyan has filed complaint against singer Papon for kissing a minor girl on her lips in Facebook live. She has filed the complaint with the National Commission for Protection of Child Rights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil