Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கெளதம் மேனனின் அன்புச்செல்வன்...ஒரு போஸ்டரை வைத்து எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்க
சென்னை : தமிழ், மலையாளத்தில் பல ஆக்ஷன் படங்களை இயக்கி தனது திறமையை நிரூபித்தவர் கெளதம் வாசுதேவ் மேனன். தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பு திறமையையும் கெளதம் மேனன் வெளிப்படுத்தி உள்ளார்.
தோள்
பட்டையில்
வலி...
பிரபல
நடிகருக்கு
4
மணி
நேரம்
நடைபெற்ற
அறுவை
சிகிச்சை..
சோகத்தில்
ரசிகர்கள்!
சமீபத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் கெளதம் மேனன் நடித்திருந்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கெளதம் மேனன் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்திலும் நடிக்கிறார்.

அன்புச்செல்வன் ஃபஸ்ட்லுக்
இந்நிலையில் கெளதம் மேனன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அன்புசெல்வன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக்கை விஷ்ணு விஷால் வெளியிட்டார். இதில் கெளதம் மேனனின் அன்புசெல்வன், டைரக்டர் வினோத் என உள்ளது. மூன்று கோணங்களில் திரும்பி நிற்கும் கெளதம் மேனனின் உருவம் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

காக்க காக்க 2 ஆ
இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டரை பார்த்து விட்டு, இது காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டு வருகின்றனர். காக்க காக்க படத்தில் சூர்யா நடித்திருந்த கேரக்டரின் பெயர் அன்புசெல்வன் என்பதால் ரசிகர்கள் இதை கேட்டு வருகின்றனர். ஆனால் இது மீண்டும் ஒரு ஸ்டைலாக போலீஸ் கதை என்பது தெளிவாக தெரிகிறது.

வாழ்த்து சொன்ன பா.ரஞ்சித்
இந்நிலையில் அன்புசெல்வன் படத்தின் மற்றொரு போஸ்டரில், கெளதம் மேனன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் ஸ்டில்கள் இருக்கிறார். இந்த போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த டைரக்டர் பா.ரஞ்சித் இதற்காக வாழ்த்து தெரிவித்து, இந்த படத்தில் கெளதம் மேனனின் அதிரடி ஆக்ஷன் நடிப்பை பார்க்க காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

அதிர்ச்சியாக உள்ளது
ஆனால் இதற்கு பதில் பதிவிட்டுள்ள கெளதம் மேனனோ, இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எந்த படத்தில் நான் இப்படி நடித்திருக்கிறேன் என தெரியவில்லை. இந்த போஸ்டரில் இருக்கும் டைரக்டரை நான் சந்தித்ததே இல்லை என தெரிவித்துள்ளார். கெளதம் மேனனின் இந்த பதிவு அனைவரையும் குழப்பமடைய வைத்துள்ளது.

என்னப்பா நடக்குது இங்க
இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஷ்ணு விஷாலும், கெளதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரின் ஸ்டைலான நடிப்பை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கெளதம் மேனனுக்கே தெரியாமல் எப்படி இந்த போஸ்டர் டைரக்டரின் பெயருடன் வெளியிடப்பட்டிருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.