என்னது அஸ்வினுக்கு 6 ஹீரோயின்களா...எந்த படத்துலனு தெரிஞ்சா அசந்துடுவீங்க
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் புகழ்பெற்றவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். அதிலும் சிவாங்கியுடன் இவரது கெமிஸ்ட்ரி பலரையும் கவர்ந்தது. இருவருக்கும் இடையே காதல் என இப்போது வரை கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அஸ்வின் ஏற்கனவே கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஓகே கண்மணி, என்னை நோக்கி பாயும் தோட்டா, ஜுலை காற்றில் உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.இதே போன்று விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான ஆபீஸ், ரெட்டை வால் குருவி, ராஜா ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் வீடியோ பாடல் அவரை டாப் ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டு போய் விட்டது. இதனால் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் அஸ்வின். சிவாங்கி, புகழ் ஆகியோரும் காமெடி ரோலில் நடிக்க பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளனர்.
தற்போது அஸ்வின், ஓ மணப்பெண்ணே, என்ன சொல்ல போகிறாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் தெலுங்கில் Meet Cute என்ற வெப்சீரிஸ் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். சமீபத்தில் தான் இந்த வெப்சீரிஸ் பணிகள் நிறைவடைந்தது. இதனை தெலுங்கு டாப் ஹீரோ நானி தான், வால் போஸ்டர் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.

இந்த வெப்சீரிஸில் அஸ்வினுக்கு ஜோடியாக 6 ஹீரோயின்கள் நடித்துள்ளார்களாம். சுனைனா, ஆதக் சர்மா, அகன்ஷச சிங், ருஹானி ஷர்மா, சன்ஷிதா பூனசா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த தகவலை நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ், ரோகினி ஆகியோரும் நடித்துள்ளனர். ஐந்து கதைகளை கொண்டதாக இந்த ஆந்திராலஜி வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஷுட்டிங் நிறைவுபெற்றதை அடுத்து, அடுத்தக்கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











