KPY பாலாவை காதலிக்கிறாரா இந்த குக் வித் கோமாளி பிரபலம்.. அவரே சொன்ன பதிலை பாருங்க!

சென்னை: கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாவை குக் வித் கோமாளி பிரபலம் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்கியவர் பாலா.

அந்த ஷோவில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த ரித்திகாவுக்கும் கேபிஒய் பாலாவுக்கும் காதலா? என்கிற கேள்விக்கு ரித்திகாவே பதில் அளித்துள்ளார்.

ஜோடி சேர்க்கும் நிகழ்ச்சிகள்

ஜோடி சேர்க்கும் நிகழ்ச்சிகள்

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் எனும் பெயரில் ஏகப்பட்ட இளம் நடிகர்களை ஜோடிகளாக கோர்த்து விட்டும், காதலிப்பது போல நடிக்க வைத்தும் ரசிகர்கள் மத்தியில் டிஆர்பியை எகிற வைத்து டிவி சேனல்கள் கலெக்‌ஷன் பார்த்து வருகின்றன.

ஜோடி பொருத்தம்

ஜோடி பொருத்தம்

ரீல் ஜோடி பொருத்தம் நல்லா இருந்தா, அவர்கள் உடனே ரியல் ஜோடிகளாகவும் மாற வேண்டும் என ரசிகர்கள் விரும்பும் அபத்த நிலையும் இன்னமும் தொடர்கிறது. அதன் விளைவாக சில ரீல் ஜோடிகளும் ரியல் ஜோடிகளாக ஆகும் சூழ்நிலைகளும் உருவாகி உள்ளன. சிலர் நண்பர்களாக பிரிந்து விடுகின்றனர்.

பாலாவுடன் காதலா

பாலாவுடன் காதலா

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ரித்திகா கேபிஒய் பாலாவுடன் இணைந்து சில வாரங்கள் ஜோடி போட்டு இருந்தார். மேலும், சிங்கிள் பொண்ணுங்க உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து அவருடன் ஜோடி போட்டு நடிக்கவே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ரித்திகா பதில்

ரித்திகா பதில்

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்த நடிகை ரித்திகாவிடம் நேரடியாகவே ரசிகர் ஒருவர் கேபிஒய் பாலாவை காதலிக்கிறீங்களா என கேட்டதற்கு ரித்திகா பதில் அளித்துள்ளார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் எங்களுக்குள் காதல் இல்லை என வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

ரசிகர்களுக்கு எச்சரிக்கை

ரசிகர்களுக்கு எச்சரிக்கை

மேலும், டிவியில் வருவதை டிவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் நிஜ வாழ்க்கையுடன் டிவி நிகழ்ச்சிகளை ஒன்றுபடுத்தி பார்க்க வேண்டாம் என்றும், இப்படி தொடர்ந்து அவரை காதலிக்கிறீங்களா? இவரை காதலிக்கிறீங்களா என டார்ச்சர் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் ரித்திகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X