குக் வித் கோமாளி புகழ் திருமணத்தில்.. கையை பிடித்துக் கொண்டு விடாத சசிகுமார்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.

அதன் பின்னர் காமெடி நடிகராக வலிமை, எதற்கும் துணிந்தவன், சபாபதி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புகழுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவுக்கும் இன்று எளிமையான முறையில் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

காதலியை கரம்பிடித்த புகழ்

காதலியை கரம்பிடித்த புகழ்

காமெடி நடிகராக வலம் வரும் புகழ் LOL எனும் அமேசான் பிரைமின் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான பென்ஸியா என்பவருக்கும் இன்று எளிய முறையில் விநாயகர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.

விநாயகர் கோயிலில் திருமணம்

விநாயகர் கோயிலில் திருமணம்

நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், நடிகர் புகழ் இன்று தனது திருமணத்தை திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை புகழ் மற்றும் பென்ஸியா திருமணம் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

 சசிகுமார், சமுத்திரகனி

சசிகுமார், சமுத்திரகனி

திருமணத்தில் நடிகர்கள் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட வெகு சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தனியாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி ஒட்டுமொத்த திரையுலகையும் புகழ் அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

கையை விடவில்லை

கையை விடவில்லை

குக் வித் கோமாளி புகழின் கையை பிடித்துக் கொண்டு நடிகர் சசிகுமார் செம ஜாலியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. மணமக்களை மனதார வாழ்த்தி உள்ளார் இயக்குநரும் நடிகருமான சசிகுமார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

விஜய் டிவி பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம் நடைபெற்றதை அறிந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். #Pugazh என்கிற ஹாஷ்டேக்கையும் சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விரைவில் ஹீரோ

விரைவில் ஹீரோ

வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களில் காமெடியனாக நடித்து வரும் புகழ் சந்தானம், சூரி, யோகி பாபு வரிசையில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். காமெடியன் புகழ் விரைவில் ஹீரோவாக உள்ள நிலையில், தமிழ் சினிமா அடுத்த காமெடியனை தேட வேண்டியது தான் போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X