என்னை மன்னிச்சிடுங்க ஷங்கர் சார்.. அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி.. அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்!
சென்னை: தியேட்டரில் விருமன் படத்தை பார்த்து முடித்து விட்டு இயக்குநர் ஷங்கரிடமே வீடியோ மூலம் அவரது மகள் அதிதி ஷங்கருக்கு காதல் சொன்ன கூல் சுரேஷின் நிலைமை தற்போது காதல் பட கிளைமேக்ஸில் வரும் பரத்தின் நிலைமை போல மாறிவிட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்று தியேட்டரில் கூல் சுரேஷ் பண்ண காமெடி எல்லை மீறிய நிலையில், எங்கே வாங்கிக் கட்டிக் கொண்டார் என தெரியவில்லை இப்படி அந்தர் பல்டி அடித்து விட்டார்.

அதிதி என் காதலி
கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தை டிஎஸ் தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் அதிதியை பார்த்து சில்லறையை சிதற விட்டேன் என்றும், அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்றும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் காமெடியாக டிரெண்டானது.

லவ் லெட்டர் வேற
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அதிதி ஷங்கரை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னுடைய காதலையும் சேர்த்து வைக்க வேண்டும் ஷங்கர் சார் என எழுதிய லவ் லெட்டரையும் மீடியாவுக்கு முன்பாக கூல் சுரேஷ் காட்டியது சர்ச்சையை கிளப்பியது.

மன்னிச்சிடுங்க ஷங்கர் சார்
இந்நிலையில், என்ன ஆச்சுன்னு தெரியல கூல் சுரேஷ் திடீரென அப்படி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதில், தனது பள்ளி தோழி தேன்மொழி ஞாபகம் அதிதி தேனாக நடித்ததை பார்த்து வந்து விட்டது என்றும் அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என்று கூறி உள்ளார்.

அதிதி எனக்கு தங்கச்சி
மன்னிப்பு மட்டும் கேட்காமல், நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று ஒரே போடாக கூல் சுரேஷ் அல்லு நடுங்க பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. விருமன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் அப்படி ஓவராக பேசி விட்டேன் என்றும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

அடி பலமோ
இந்நிலையில், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கூல் சுரேஷ் பேசியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என ஒவ்வொரு படத்துக்கும் வந்து உளறிக் கொட்டிக் கொண்டு டிரெண்டாகி வந்த கூல் சுரேஷுக்கு இந்த முறை உண்மையிலேயே அடி பலமோ என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











