Don't Miss!
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
"வீடு நிரப்பும் போராட்டம் நீ".. அழகான வரிகளில்.. கருணாகரனின் கொரோனா கவிதை
சென்னை : கண்ணுக்குப் புலப்படாமல் உலகெங்கிலும் பெரும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றியொரு கவிதையை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கருணாகரன்.
சிம்பு நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், 'வல்லவன்' வெற்றித் திரைப்படத்தில் இடம் பெற்ற 'காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்' என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கருணாகரன், அதைத் தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன், சென்னை28 பார்ட் 2, சக்க போடு போடு ராஜா, பேரன்பு, பார்ட்டி, நிசப்தம், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் வைகைப்புயல் வடிவேலு, டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்ற பல சினிமா பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர். அந்த வகையில் கருணாகரனும் தனது கொரோனா கவிதையை வெளியிட்டு உள்ளார். அந்த கவிதையில், '' சுதந்திர இந்தியாவில் அரசுகள் நடத்தும் வீடு நிரப்பும் போராட்டம் நீ" என மிக அழகான வரிகளில் கூறியுள்ளார் கருணாகரன்.
இந்தா கிளம்பிட்டாங்கள்ல.. அஜித்.. விஜய் ரசிகர்களை தொடர்ந்து கோதாவில் குதித்த தனுஷ் ரசிகர்கள்!
இந்த கவிதை வரிகள் அனைவராலும் பேசப்பட்டு, அனைவரையும் பெரும் அளவில் கவர்ந்துள்ளது. கொரோனா பீதி நாளுக்கு நாள் ஒரு பக்கம் குறைந்தாலும், மறு பக்கம் தனது விஸ்வரூபத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்கள் அனைவரையும் பாதுகாக்க அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரதையும் பொருட்படுத்தாமல் பல சட்டங்களையும், உதவிகளையும் செய்து தான் வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் பொது மக்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதுடன், அரசாங்கம் சொல்வதை கேட்டு வீட்டிலேயே இருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் சொல்வதை கேட்காமல் அலட்சியமாக இருக்க தான் செய்கிறார்கள். கேரம் போர்டு மற்றும் கிரிக்கெட் விளையாடும் புல்லிங்கோஸ் வீடியோக்கள் இதற்கு ஒரு உதாரணம்.

மக்களின் அலட்சிய போக்கு மாற வேண்டும் என்று பலரும் தங்களது பங்கிற்காக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம் சொல்வதை கடைபிடித்து கொரோனா என்ற கொடிய அரக்கனை அழிக்க வேண்டும் என்பது தான் இந்த கருணாகரனின் கவிதை வற்புறுத்துகிறது.