twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு.. வித்யாபாலன் படத்துக்கு தடை

    |

    மும்பை: ராஜீவ் மேனன் திரைக்கதை எழுதி டைரக்டு செய்ய, வித்யாபாலன் நடிப்பதாக இருந்த, எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படத்திற்கு தடை விதிக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ராஜீவ் மேனன் முடிவு செய்து, எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

    எம்.எஸ்.சுப்புலட்சுமி படவேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் இப்படத்துக்கு எதிராக கேரளாவை சேர்ந்த டாக்டர் சோமபிரசாத் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார்.

    ராஜீவ் மேனனின் புதிய படம்

    ராஜீவ் மேனனின் புதிய படம்

    'மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' வெற்றிப்படக்களைத் தந்தராஜீவ் மேனனின் அடுத்த கதைக்களம், கர்நாடக இசைப்பாடகி மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை.

    சிலுக்கான வித்யா...

    சிலுக்கான வித்யா...

    வித்யாபாலன் ஏற்கனவே ‘த டர்ட்டி பிக்சர்' என்ற இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

    எம்.எஸ்.சுப்புலட்சுமியாகும் வித்யா...

    எம்.எஸ்.சுப்புலட்சுமியாகும் வித்யா...

    எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் வித்யாபாலன் நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானவுடன், அடுத்த விருது கனவு தொடங்கிவிட்டது வித்யாவிற்கு.

    அதிரடி வழக்கு

    அதிரடி வழக்கு

    சுறுசுறுப்பாக வளர்ந்து வரும் இப்படத்துக்கு எதிராக கேரளாவை சேர்ந்த டாக்டர் சோமபிரசாத் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த வழக்கால் தற்போது படத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    எங்களுக்கே உரிமை

    எங்களுக்கே உரிமை

    தடை உத்தரவு வாங்கியது குறித்து டாக்டர் சோமபிரசாத் கூறியதாவது: 'எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்கனவே நாங்கள் உரிமை வாங்கி வைத்துள்ளோம். ராஜீவ் மேனன் இதை படமாக்கப் போவதாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளித்தன. எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை படமாக்கும் உரிமை எங்களிடம் இருக்கிறது. எனவே தான் கோர்ட்டுக்கு போனோம்' என்றார்.

    English summary
    While all are eagerly looking forward to Rajiv Menon's forthcoming biopic on legendary singer MS Subbulakshmi, the project has already hit troubled waters...The film's progress reported to have stalled due to a stay order filed by the well-acclaimed producer Somaprasad.The biopic will feature Vidya Balan playing the lead. According to him, he had purchased the rights of 'MS - A Life in Music', a book by TJS George and had planned to adapt the book into film which was supposed to be helmed by Menon. However, Somaprasad cited that tables turned, when without his knowledge the director went ahead to associate with another banner to direct that film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X