தி லெஜண்ட் பட ஹீரோயினை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கிரிக்கெட் வீரர்.. எல்லாம் அந்த மேட்டர் தான்!
சென்னை: தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஒருவரை பற்றி பேசியது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவியது.
பலரும், அது கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தான் என போட்டு உடைத்த நிலையில், ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நடிகையை விளாசி உள்ளார்.

வாட்ஸ்அப்பில் பிளாக்
நடிகை ஊர்வசி ரவுத்தேலா உடன் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நெருக்கமாக இருந்ததாகவும் சில பிரச்சனைகள் காரணமாக அவரை வாட்ஸ்அப்பில் இருந்து பிளாக் செய்து விட்டார் என்றும் கடந்த 2018ம் ஆண்டு தகவல்கள் பரவின. அதிலிருந்து இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்தன. இருவரும் மாறி மாறி சோஷியல் மீடியாவிலும் ஒருவரை ஒருவர் பிளாக் செய்தனர்.

ரசித்து பார்த்த ரசகுல்லா
சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் சிக்ஸராக விளாச அதை ரசித்து பார்த்த ஊர்வசி ரவுத்தேலா பக்கம் கேமராவை திருப்பி கேமராமேன் சரியான சம்பவத்தை செய்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மின்னல் வேகத்தில் திரெண்டானது.

ஒருத்தன் எனக்காக வெயிட் பண்ணான்
சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த ஊர்வசி ரவுத்தேலா, ஹோட்டல் லாபியில் என்னை பார்க்க ஒருத்தன் ரொம்ப நேரம் வெயிட் பண்ணான் என்கிற விஷயத்தை ஓப்பன் செய்ய, அந்த பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், ரிஷப் பண்ட் பெயரை அவர் ரிவீல் செய்யவில்லை என்றாலும், ரசிகர்கள் ரிஷப் பண்ட் தான் என கமெண்ட் போட்டு தாக்கினர். கடுப்பான ரிஷப் பண்ட்டும் அதற்கு எதிர்வினை ஆற்றியிருப்பது தான் தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video

இஷ்டத்துக்கு பொய்
பிரபலமாக வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு சிலர் மீடியாவில் பொய் சொல்லி வருகின்றனர் என கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபத்தை கொட்ட, ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டி ரிஷப் பந்தை அந்த அளவுக்கு பாதித்துள்ளது என்றும், இப்பவும் ஊர்வசியின் பேட்டிகளை தேடித் தேடிப் போய் பார்த்து வருகிறாரா ரிஷப் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











