தல.. ஸ்போர்ட்ஸ் எல்லாம் ஓவரா?.. பாலிவுட்டில் களமிறங்கும் தல.. வேற லெவல் லுக்கா இருக்கேப்பா!
மும்பை: தமிழ்நாட்டில் தல என்றால் அது இரண்டு பேர் தான். ஒன்று நடிகர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தீனா படத்தில் இருந்து தல என்று அழைத்து வருகிறார்கள். அதற்கு அடுத்து ஒருவரை தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை தான். இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருக்கும் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் உள்ளது, இருவருக்கும் நடிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது என்பதுதான்.
தல தோனி கிரிக்கெட் மூலமாகத்தான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமாகிறார். குறிப்பாக இவரது நீளமான கூந்தலும், ஹெலிகாப்டர் ஷாட்டும் தான் இவரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. கிரிக்கெட்டில் தோனி இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்த பின்னர் பல விளம்பரப் படங்களில் நடித்தார். இவரது ஆண்டு வருமானமே விளம்பரப் படங்களில் நடிப்பதன் மூலம் தான் எகிறியது. இப்போதும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரங்களில் வருமானம்: ஒரு விளம்பரத்தில் நடிக்க பல கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறாராம் தோனி. இப்படி இருக்கையில் அவரது மனைவி தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அவர் வந்த வேகத்தில் திரும்பி விட்டார். இப்படி இருக்கையில் தோனி பாலிவுட் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே அவ்வப்போது வந்து கொண்டு இருந்தது. இப்படி இருக்கையில் அவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்துள்ள தி சேஸ் என்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ஏகபோக வரவேற்பு: இந்த ப்ரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தல சூப்பர் தல, இனி பாலிவுட் ஹீரோ தல தோனி என்று பேசி வருகிறார்கள். சிலரோ இது ஏதோ விளம்பரத்தின் ப்ரோமோ என்றும் பேசி வருகிறார்கள். இதுவரை இந்த ப்ரோமோவை மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். இப்போது இந்த ப்ரோமோ குறித்த பேச்சு தல தோனி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக உள்ளது.
தோனி இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் சென்னை அணிக்காக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இவரது ஃபினிஷிங் ஸ்டைல் மற்றும் கேப்டன்சியைப் பார்க்க ரசிகர்கள் இப்போதும் ஆர்வமாக இருக்கிறர்கள். ஐபிஎல் கோப்பையை எந்த அணி வென்றாலும் கடந்த சில சீசன்களாக தோனிதான் ஐபிஎல் தொடரின் நாயகனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











