»   »  'கபாலி திருவிழா’... டல்லாஸில் நள்ளிரவு தாண்டியும் திறந்திருக்கும் தமிழ் உணவகங்கள்!

'கபாலி திருவிழா’... டல்லாஸில் நள்ளிரவு தாண்டியும் திறந்திருக்கும் தமிழ் உணவகங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): கபாலி திரைப்பட வெளியீட்டையொட்டி, டல்லாஸில் உள்ள தமிழ் உணவகங்கள் நள்ளிரவு தாண்டி , அதிகாலை இரண்டு மணி வரை திறந்து உள்ளன.

படம் பார்த்து விட்டு வரும் பல ஆயிரக்கணக்கான மக்களால் உணவகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.


Dallas restaurants opening till dawn for Kabali

குடும்பத்தோடு திரைப்படம் போய்விட்டு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவது தமிழகத்தில் காலங்காலமாக நடந்து வரும் ஒன்றாகும். குறிப்பாக ரஜினி படம் வந்தால் வார இறுதியில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.


அமெரிக்காவில் சனி ஞாயிறு மதியம் அல்லது மாலைக் காட்சிக்கு படம் பார்க்கப்போகிறவர்கள், அப்படியே வெளியே சாப்பிட்டு வருவதும் வாடிக்கையான ஒன்றுதான்.


கபாலி திரைப்படத்திற்கு வியாழக்கிழமை, இர்விங் திரையரங்கத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமான முதல் காட்சியிலிருந்து இரவு 10:30 வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 19 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.


வசதியான இருக்கையைப் பிடிப்பதற்காக, வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


தமிழகத்தில் போல், வரிசையில் நிற்பவர்களின் உற்சாகப் பேச்சில் அந்த பகுதியே பெரும் திருவிழா போல் காட்சியளித்தது.


படம் விட்டு வருபவர்கள் வசதிக்காக, அருகே உள்ள தமிழ் உணவகங்கள் அதிகாலை 12 மணி வரை திறந்திருந்தன. சனிக்கிழமை வரையிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர கபாலி டிக்கெட் கொண்டு வருபவர்களுக்கு மொத்த பில் தொகையில் 10 சதவீத தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.


தியேட்டரிலிருந்து மக்கள் அலை அலையாக இந்த உணவகங்களுக்கு செல்கிறார்கள். கபாலி மெனு என்று பிரத்தியேகமாக தயார்ப்படுத்தியுள்ளார்கள்.


தியேட்டருக்கு மட்டுமல்ல, உணவங்களுக்கும் கூடுதல் வருமானம். அமெரிக்க திரைப்பட வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையாகும். இதெல்லாம் ரஜினியைத் தவிர வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியுமா.. ரஜினியின் கபாலி திருவிழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்!


-இர தினகர்

English summary
Most of the restaurants in Dallas City, US are opening till dawn for the convenience of people who came out of Rajini's Kabali show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil