Don't Miss!
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிபி ஜோடியிலிருந்து அமீர்-பாவனி விலகலா?.. இருவரும் சொன்ன விளக்கம் !
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து அமீர் பாவனி விலகி உள்ளதாக வெளியாகி உள்ள வதந்திக்கு இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
பிக் பாஸ்சீசன் 5 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பாவனி. இவர் ஷோவுக்குள் நுழைந்ததுமே ஏகத்திற்கும் பிரபலமாகி விட்டார். பிக் பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், வந்ததுமே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். அவருக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
சென்னை
ஏரியா
பெயர்களை
கொண்டாடிய
தமிழ்
சினிமாக்கள்...ஓர்
பார்வை

பாவனிக்கு 3வது இடம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் பாவனி.

பிபி ஜோடிகள் 2
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் பிரியங்கா மற்றும் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

தடபுடலான திருமணம்
இதையடுத்து,கடந்த வாரம் நடந்த கல்யாண கொண்ட்ட விழாவில், அமீர் பாவனிக்கு பொட்டு வைத்து தாலி கட்டி திருமண கொண்டாட்டம் தடபுடலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் பலர் விஜய் டிவி எப்படியோ அமீரின் ஆசையை நிறைவேற்றி விட்டதாக கூறிவந்தனர்.

விலகலா?
இந்நிலையில் பாவனியும் அமீரும் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக தகவால் வெளியாகி உள்ள நிலையில்,இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் உங்களை போன்ற ஒரு மாஸ்டர் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் மேடையில் பயம் இல்லாமல் நடனம் ஆடியதற்கு முக்கிய காரணம் நீங்கள் கற்று கொடுத்த தொடர்ச்சியான பயிற்சி தான். உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு இப்படி ஒரு சிறப்பான நடனத்தை கற்று கொடுத்து இருக்க முடியாது. உங்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் நான் கற்று கொண்டேன்.

காலில் கடுமையான காயம்
உங்களுக்கு மூட்டில் கடுமையான காயம் ஏற்பட்ட போதும், லீவு எடுக்காமல், உங்கள் ரசிகர்களுக்காகவும் நடனத்தில் மீது இருந்த ஈடுபாடு காரணமாகவும் பாதியில் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக வலியையும் பொருட்படுத்தாமல் நடனம் ஆடினீர்கள். இது வேலை மீது உங்களுக்கு இருந்த மரியாதையை காட்டுகிறது. ஆனால், இனி வரும் நாட்களில் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

காத்திருங்கள்
அதே போல அமீரும், எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நிகழ்ச்சியை விட்டு விலக போகிறோம் என்ற வதந்தி பரவி வருகிறது. நிச்சயம் இதை விட்டு போகும் எண்ணம் இல்லை. இனி வரும் எபிசோட்டுகளில் எங்களது நடனத்தை காண காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.