»   »  'கிடாரி' இசையமைப்பாளராக மாறிய காமெடி ஹீரோ

'கிடாரி' இசையமைப்பாளராக மாறிய காமெடி ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜதந்திரம் படத்தில் தன்னுடைய காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்த தர்புக சிவா, தற்போது தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

தாரை தப்பட்டை, வெற்றிவேல் படங்களுக்குப் பின் சசிக்குமார் கிடாரி என்னும் புதிய படத்தில் நடித்துவருகிறார். வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் முருகேசன் இயக்கி வரும் இப்படத்தை சசிக்குமார் தன்னுடைய பசங்க புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

வெற்றிவேல் நாயகிகளில் ஒருவரான நிகிலா 2 வது முறையாக இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து சசிக்குமார் ''எனது தயாரிப்பில் இசையமைப்பாளர் தர்புகா சிவா அறிமுகமாகிறார். ‪‎கிடாரி‬ படத்துக்காக 7 பாடல்களை அருமையாகக் கொடுத்து இருக்கிறார். விரைவில் இசை வெளியீடு நடைபெறும்'' என்று கூறியிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி வரும் வேளையில் நடிகர் இசையமைப்பாளராக மாறியிருப்பது, கோலிவுட்டில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Rajathandhiram Fame Darbuka Siva is debuting as music director in Sasi Kumar's Kidaari.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil