என் மடியிலேயே உட்கார்ந்துக்கலாமே.. நிவின் பாலியை நோஸ் கட் செய்த நயன்தாரா.. டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!
சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள "டியர் ஸ்டூடண்ட்ஸ்" படத்தின் டீஸர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நயன்தாரா மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், இளைய தலைமுறையினரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை டீஸரை பார்த்தாலே புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில், நயன்தாரா மற்றும் நிவின் பாலியுடன், புதுமுக நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில் நடிகை நயன்தாரா தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரியாக நயன்தாரா: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் நயன்தாரா காக்கிச் சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பார். இந்த படத்திலும் அதே ரூட்டையே அவர் ஃபாலோ செய்கிறார் என தெரிகிறது. சுந்தர். சி இயக்கத்தில் நடித்து வரும் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒரு சீனில் காக்கிச்சட்டை அணிந்து நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டியர் ஸ்டூடண்ட்ஸ் திரைப்படத்தில் உணவகத்தில் இருக்கும் நிவின் பாலியை விசாரிக்க மஃப்டியில் வர அதிலிருந்து படத்தின் காட்சிகள் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து முடியும் டீசர் சிரிப்பலையை உருவாக்குகிறது.
டீசர் நல்லா இருக்கு: சிபி மேத்யூ அலெக்ஸ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆனந்த் சி சந்திரன் மற்றும் ஷினோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். லால் கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். "டியர் ஸ்டூடண்ட்ஸ்" திரைப்படம் Maverik Movies Pvt. Ltd, Pauly Jr Pictures, Rowdy Pictures Pvt. Ltd ஆகிய நிறுவனங்களின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீஸர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த டீஸரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக, நயன்தாரா மற்றும் நிவின் பாலியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
மேல உட்கார வேண்டியதுதானே: நிவின் பாலியை விசாரிக்க வந்த லேடி போலீஸான நயன்தாரா தனிப்பட்ட முறையில் பேசணும்னு சொல்ல அவர் அருகே நிவின் பாலி வந்து அமர, ஏன் மேல வந்து மடியில உட்கார வேண்டியது தானே என சொல்லும் காட்சிகள் எல்லாம் காமெடி ரகளை. கண்டிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தடுத்து வெயிட்டான வெற்றிகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உறுதி. கன்னடத்தில் யஷ் உடன் இணைந்து டாக்ஸிக் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











