»   »  என்னது தீபிகா படுகோனேவைத் தெரியாதா? பாரின் பத்திரிகையை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்

என்னது தீபிகா படுகோனேவைத் தெரியாதா? பாரின் பத்திரிகையை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுடன் டின்னருக்கு சென்ற தீபிகாவை, ஜோகோவிச்சின் காதலி என வெளிநாட்டுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பத்திரிகையின் செய்தியை ரசிகர்கள் கண்டிக்க தற்போது #Deepika Padukone என்னும் ஹெஷ்டேக்கானது ட்விட்டரில் ட்ரெண்டடித்து வருகிறது.

பாலிவுட் அழகி தீபிகா படுகோனே தற்போது ஹாலிவுட் நடிகரான வின் டீசலுடன் நடித்து வருகிறார்.

நோவக் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச்

கடந்த செவ்வாயன்று உலகின் நம்பர் 1 நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சுடன் சேர்ந்து தீபிகா படுகோனே இரவு விருந்து உண்டிருக்கிறார். லாஸ் ஏஞ்செல்ஸின் மிகப்பிரபலமான ஒரு உணவகத்தில் இந்த விருந்து நடைபெற்றிருக்கிறது.

ஒரே காரில்

ஒரே காரில்

மேலும் ஜோகோவிச், தீபிகா இருவரும் ஒரே காரில் அந்த உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பாலிவுட் நடிகையான தீபிகா தற்போது வின் டீசலுடன் XXX என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

பாலிவுட்டின் இளம் நாயகன் ரன்வீர் சிங்- தீபிகா காதல் பாலிவுட்டில் மிகவும் பிரசித்தமான ஒன்று. தற்போது அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைப்பதால் அவர் ஹாலிவுட்டில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்.

இரவு விடுதி

இரவு விடுதி

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் ஜோகோவிச் இந்த விருந்தின் போது சாதாராண உடையுடன் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் தீபிகாவை நீண்ட முழங்கால்களை கொண்ட அழகி என்று குறிப்பிட்டுள்ளது. இரவு விடுதி ஒன்றில் இருவரும் ஒன்றாக இருந்ததாகவும், தீபிகாவை ஜோகோவிச்சின் காதலி என்றும் குறிப்பிட்டுள்ளது.

ரசிகர்கள் கண்டனம்

இதனால் தீபிகா படுகோனேவை இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா? என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஜோகோவிச்சின் காதலி என்று தீபிகாவை குறிப்பிட்டது தான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக உள்ளது. ஜோகோவிச், தீபிகா இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா பல மாதங்கள் கஷ்டப்பட்டு குவாண்டிகோ தொடரின் மூலம் அடைந்த புகழை, தீபிகா ஒரு விருந்தின் மூலம் ஒரேநாளில் அடைந்து விட்டதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். சிந்திக்க வேண்டிய கருத்து தான்.

English summary
Deepika Padukone, Novak Djokovic Dinner now Trend in all Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil