»   »  இந்த தீபிகாவும், ரன்வீரும் செய்த வேலையைப் பாருங்க

இந்த தீபிகாவும், ரன்வீரும் செய்த வேலையைப் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் ஹாட் ஜோடியான தீபிகாவும் - ரன்வீரும் செய்த செயலைப் பார்த்து ஊடகங்கள், பொதுமக்கள் அனைவரும் என்னதான் லவ்வர்ஸா இருந்தாலும் இப்படியா என்று கேட்டுள்ளனர்.

அப்படி என்ன செய்தார்கள் என்று கேட்கிறீர்களா பாஜிரோ மஸ்தானி படத்தில் நடித்து வரும் இருவரும் சமீபத்தில் விமான நிலையத்திற்கு ஒன்றாக வந்திருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் இருவரையும் பார்த்த வண்ணம் இருந்தனர்.

ஒன்றாக கைகோர்த்துக் கொண்டுவந்த இருவரும் தங்கள் காரை அடைந்தவுடன் சற்று ஒரு நிமிடம் தாமதித்து பின்னர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

இதைப் பார்த்த அனைவரும் பொது இடத்தில் இப்படியா செய்வது என்று கேள்வி கேட்டுள்ளனர். ஒருபக்கம் இப்படி என்றால் மறுபக்கம் இவர்கள் இருவரையும் திட்டிக்கொண்டே ஏராளமான பேர் இந்தக் காட்சியைப் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்த முத்தக் காட்சி. இதில் உச்சகட்டமாக இவர்கள் இருவரின் பெயரிலும் பேன்ஸ் கிளப் ஆரம்பித்து இருக்கும் ரசிகர்கள் இதனை போஸ்ட் செய்து என்ன ஒரு அருமையான ஜோடி என்று புகழ்ந்து வருகின்றனர்.

நீங்கெல்லாம் நல்லா வருவீங்க...

English summary
Bollywood Beauty Deepika Padukone Kissing Ranveer Singh At The Airport. now the couple sharing screen space in Sanjay Leela Bhansali's Bajirao Mastani movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil