Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓடிடியில் ‘விக்ரம்‘ ரிலீஸாகும் போது அந்த சீன் இருக்கும்...படக்குழு வெளியிட்ட சுவாரசியத் தகவல் !
சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் போட்டி போட்டு நடித்து இருந்தனர். லோகேஷ் கனகராஜ் திரைக்கதையும், அனிருத்தின் இசையும் இந்த படத்திற்கு மிகப் பெரிய தூண்களாக இருந்தது.
இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
உலகளவில்
அதிக
வசூல்
செய்த
விக்ரம்..
2022ல்
அதிகமாக
வசூலித்த
தமிழ்ப்படம்
என
சாதனை!

விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர்களின் மிரட்டலான நடிப்பில் ஆக்ஷனில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் விக்ரம் திரைப்படம் ஒரு மாஸ் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைவருக்கும் பரிசு
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றியினை பெற்றது. படம் வெற்றிபெற்றதற்காக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்து அசத்தினார். அதே போல இந்த படத்தில் உதவிஇயக்குநராக இருந்த 13இயக்குநருக்கும் பைக்கையும், சூர்யாவின் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில் ரோலக்ஸ் வாட்சையும் பரிசாக அளித்தார்.

டெலிட்சீன்
இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இது குறித்த புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இளவயது காட்சிகள் சில இடம்பெற்றுள்ளதாகவும், அதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

படம் வேறமாதிரி இருக்கும்
ஆனால், அந்த காட்சிகளை நீக்கிவிட்டு திரையரங்குகளில் ‘விக்ரம்' ரிலீஸ் செய்யப்பட்டது. கமல்ஹாசனின் இளவயது காட்சிகள் ஓடிடியில் ரிலீஸாகும்போது இடம்பெறும் என்றும் அப்போது அந்த படம் வேற மாதிரி இருக்கும் என்று படக்குழுவினர் ஆச்சரியமான தகவலை தெரிவித்துள்ளனர்.

மைனா நந்தினி
மேலும் இப்படத்தில், விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்த மைனா நந்தினி, நானும் விஜய்சேதுபதியும் சேர்ந்து உரையாடும் காட்சி நீக்கப்பட்டது குறித்து வருத்தத்துடன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அந்த காட்சியில் ஓடிடியில் படம் வெளியாகும் போது இடம் பெருமான என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
Recommended Video

சூர்யா சம்பளம் பெறவில்லை
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார். இந்த கேரக்டரையே தனி படமாக எடுக்க வேண்டும் என்று சூர்யாவின் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். விக்ரம் படத்தில் நடிப்பதற்காக சூர்யா சம்பளம் ஏதும் பெறவில்லை என்று தகவல்கள் வெளியானது